புவி அழுத்தத்தால் நதிகள் பாதை மாற்றம் : : பேராசிரியர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புவி அழுத்தத்தால் நதிகள் பாதை மாற்றம் : : பேராசிரியர் தகவல்

Added : டிச 08, 2017
Advertisement

காரைக்குடி: ''புவியின் வடக்கே தள்ளிய அழுத்தத்தால், இந்தியாவில் நிலம், நதிகள், கடலோரம், நிலத்தடி நீர் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன,'' என காரைக்குடியில் பேராசிரியர் சோம.ராமசாமி கூறினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலையில் புவி அறிவியல் துறையை துணைவேந்தர் சுப்பையா தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அத்துறை பேராசிரியரும், காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தருமான சோம.ராமசாமி கூறியதாவது:
செயற்கை கோள் படங்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய புவித்தட்டு வலுவாக உள்ளது தெரிகிறது. அது 65 மில்லியன் ஆண்டுகளில் 6500 கி.மீ., வடக்கே அழுத்த சக்தியால் தள்ளப்பட்டது. அழுத்த சக்தி இந்திய தட்டை வடக்கே தள்ளுவதாலும், வடக்கில் உள்ள இமயமலை அதை நகரவிடாமல் தடுப்பதாலும், இந்திய தட்டு மண்புழு போல் கிழக்கு மேற்காக பெரிய மேடுகளாகவும், பள்ளங்களாகவும் மாறி, மாறி உள்ளது. இந்த சக்தியால் இந்தியாவில் பல திசைகளில் நீளமான வெடிப்புகள் உருவாகி வருகின்றன.
பூமித் தட்டில் மாற்றம்
சமீப கால ஆய்வில் தென்னிந்தியாவில் மங்களூரு, - பெங்களூரு, - சென்னை வழியாகவும், கொச்சி -- மதுரை - - ராமேஸ்வரம் வழியாகவும் பூமி மேல் எழும்பியும், இவை இரண்டுக்கும் நடுவே பாலக்காடு - - மணமேல்குடி வழியாக பூமி கீழ் நோக்கி வளைந்தும் இருப்பது தெரியவந்துள்ளது.
புவியியல் சக்தியால் இந்தியாவின் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் நிலம், நதிகள், கடலோரம், நிலத்தடி நீர் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக காவிரி ஆறு ஒகேனக்கல் - சென்னை பாதையில் இருந்து ஒகேனக்கல்- - தஞ்சாவூர் பாதைக்கு மாறி இருக்கிறது.
தென்பெண்ணை ஆறு திருவெண்ெணய்நல்லுாருக்கு அருகே புதையுறுவதும், காவிரி ஆறு தஞ்சாவூர் டெல்டா பகுதியில் திருச்சி --- வேதாரண்யம் பாதையில் இருந்து திருச்சி - கொள்ளிடம் பாதைக்கு மாறியுள்ளதும், 25 ஆயிரம் பிறை வடிவ குளங்களால் தனித்தன்மை வாய்ந்த வைகை டெல்டா உருவாகி உள்ளதும், தமிழகத்தின் பல நகரங்களில் கீழே நதிகள் புதையுண்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நில அசைவுகளால், நதிகளின் செயல்பாடுகள் மற்றும் கடலோர நீரோட்ட சக்திகள் இணைந்து இந்தியாவின் கடற்கரை பகுதிகளை உருவாக்குவதோடு, இயற்கை சீற்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
அழகப்பா பல்கலையில் புதிதாக தொடங்கப்பட்ட புவி அறிவியல் துறை மூலம் காவிரி, வைகை டெல்டா பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை கண்டறிதல், வெப்ப நீர் ஊற்றுக்களின் கணிப்பு, வைகை டெல்டாவில் உள்ள 25 ஆயிரம் பிறைவடிவ குளங்களை புத்துயிர் ஊட்டி நீர்வள ஆதாரங்களை பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை