மீனவர் சடலங்களை மீட்பதில்லை : கடற்படை மீது மீனவர்கள் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர் சடலங்களை மீட்பதில்லை : கடற்படை மீது மீனவர்கள் புகார்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: 'கன்னியாகுமரியை தாக்கிய, 'ஒக்கி' புயலால், 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளனர். மீட்புப் பணி முழுவீச்சில் நடக்கவில்லை' என, இந்திய மீனவர் சங்க தலைவர், தயாளன் மற்றும் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத் தலைவர், தமிழ்நெறியன் ஆகியோர் புகார் கூறினர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: 'ஒக்கி' புயலால், குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நீரோடி, மார்த்தாண்டன்துறை, வல்லவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, பூத்துறை, ராமன்துறை, துாத்துக்குடி, முட்டம், குளச்சல், மணக்குடி உள்ளிட்ட, 53 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 995 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதில் அதிகபட்சமாக, வல்லவிளை கிராமத்தில், 430 மீனவர்கள் மாயமாகி உள்ளனர்; 60க்கும் மேற்பட்ட படகுகளும் மாயமாகி உள்ளன.
கேரள அரசை போல், தமிழக அரசும், மத்திய அரசும், மீட்புப் பணியில் அக்கறை காட்டவில்லை.
கடலில் மிதக்கும் மீனவர்களின் சடலங்களை, கடற்படை மீட்பதில்லை என, நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவித்தனர். உண்மையான நிலவரத்தை கூறுவதில், மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன.
போர்க்கால அடிப்படையில், குமரி மாவட்டத்தை சீரமைக்கும் முயற்சியில், மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு, அதிகபட்சமாக, ஒரு கோடி ரூபாய் வரை, இழப்பீடு வழங்க வேண்டும். விரைவில், டில்லி சென்று, மத்திய நிதியமைச்சரை சந்தித்து, மனு தர உள்ளோம். குமரியில், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஆர்.கே.நகருக்கு தரும் முக்கியத்துவத்தை, குமரிக்கு தர வேண்டும். விரைவில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், 608 மீனவ கிராமங்களையும் ஒன்றிணைத்து, போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
08-டிச-201712:42:33 IST Report Abuse
Nalam Virumbi பரந்த கடலில் மீட்பது கடினம். ஈமாக் கடனை செய்து விடுங்கள். மீட்கப்பட்டால் நன்றி கூறுங்கள்.... மீட்டவற்கும் இறைவனுக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X