தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு எலும்பு முறிவு : திண்டுக்கல் அருகே கார் விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு எலும்பு முறிவு : திண்டுக்கல் அருகே கார் விபத்து

Added : டிச 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு எலும்பு முறிவு : திண்டுக்கல் அருகே கார் விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கார் விபத்தில் சசிகலா உறவினரான தினகரன்
ஆதரவாளர் புகழேந்தி,60,க்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க., செயலாளராக உள்ளார். இவர் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து சேலம் வந்தார். அங்கிருந்து போர்டு எண்டோவர் காரில் இவருடன், நண்பர் ஜெயராஜூம் வந்தார்.காரை பெங்களூருவைச் சேர்ந்த மேத்யூ ஓட்டி வந்தார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நான்குவழிச்சாலையின் மேம்பாலத்தில் நேற்று மாலை 4:05 மணிக்கு வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் புகழேந்தியின் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-டிச-201715:43:14 IST Report Abuse
Cheran Perumal இவருக்கு தோள் உடைந்தது தினகரனுக்கு கை உடைந்தது போல.
Rate this:
Share this comment
Cancel
aanthai - Toronto,கனடா
08-டிச-201707:22:20 IST Report Abuse
aanthai அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு( சென்னை) கொண்டுபோங்கள் எல்லாம் சரி ஆகிவிடும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை