அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய வருவாய்வழித் திறனாய்வு தேர்வு : மாணவர்கள் குழப்பம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய வருவாய்வழித் திறனாய்வு தேர்வு : மாணவர்கள் குழப்பம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிவகங்கை: அரையாண்டு தேர்வு சமயத்தில் தேசிய வருவாய்வழித் திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது.
இத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த ஆண்டு டிச.,
9ல் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 3 லட்சம்
பேர் விண்ணப்பித்துள்ளனர்.
திடீரென டிச., 16 க்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. அந்த சமயத்தில் அரையாண்டு தேர்வு நடப்பதால், வருவாய்வழித் திறனாய்வு தேர்வுக்கு படிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது மாநிலம் முழுவதும் கலைத்திருவிழா நடந்து வருகிறது. தொடர்ந்து அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. அதேசமயத்தில் திறனாய்வுத் தேர்வை நடத்தினால் மாணவர்களுக்கு சிரமப்படுவர்.
இத்தேர்வுக்கு ஏழாம் வகுப்பு பாடங்களையும் சேர்த்து படிக்க வேண்டியுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளை போலவே ஜனவரி கடைசி (அ) பிப்ரவரி முதல் வாரத்தில் திறனாய்வுத் தேர்வை நடத்த வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை