விடுதியில் வாந்தி, மயக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விடுதியில் வாந்தி, மயக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், இரும்பாலை அருகேயுள்ள அரசு மருத்துவமனை செவிலியர் விடுதியில், 300க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, உணவில் கோழிக்கறி வழங்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, திடீரென பலருக்கும், வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பயிற்சி செவிலியர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில், 20 பேர், புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினர். மற்றவர்கள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில், விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X