ரூ.80 கோடி மோசடி புகார் விசாரிக்க ஐகோர்ட் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.80 கோடி மோசடி புகார் விசாரிக்க ஐகோர்ட் தடை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:போலியாக நிறுவனம் துவங்கி, 80 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆறு பேர் மீது திருப்பூர் மத்திய குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது.திருப்பூர், ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 68. பனியன் உற்பத்தி நிறுவன உரிமையாளர். நண்பர் சிவராமன், துரைசாமி, மனைவி தனலட்சுமி உடன் கூட்டு சேர்ந்து பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தினார். இந்நிலையில், நிறுவன கணக்கை நிர்வகித்த துரைசாமி, தன் மனைவி தனலட்சுமி, மருமகன்கள் சண்முகவடிவேல், மகேஷ் குமார், அலுவலர்கள் ராமராஜன், கண்ணன் உடன் சேர்ந்து அதே பெயரில் வேறொரு நிறுவனம் துவக்கினார்.இந்த நிறுவனத்தின் மூலம், கணக்குகளில் குளறுபடி செய்து, துரைசாமி உள்பட, ஆறு பேர் மொத்தம், 80 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, புகார் தெரிவித்த, வெங்கடாசலம், சம்பந்தப்பட்டவர்கள் மீது, வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு அளித்தார். அதன் பேரில் ஐகோர்ட் உத்தரவிட்டு, திருப்பூர் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த மாதம் துரைசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "இந்நிறுவனம் குறித்து ஏற்கனவே கடந்த 2016ல், முன்னாள் நீதிபதி தணிகாசலம் தலைமையிலான இசைவு தீர்ப்பாயம் முன்னிலையில் சிவில் வழக்கு விசாரணை நடத்தி, அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தாமல் உள்ளது.எனவே, இசைவு தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள்ள சிவில் வழக்கை மறைத்து, வழக்கு பதிவு செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே, மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இது குறித்து விசாரிக்க தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார். அதனடிப்படையில், இந்த வழக்கு மீது போலீஸ் விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை