Prime Minister Narendra Modi to visit Palestine, says envoy Adnan A Alihaijaa | ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன

Added : டிச 08, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெருசலேம்,Jerusalem, இந்தியா,India, பாலஸ்தீன விடுதலை, Palestine Liberation,இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலேம், Israel capital city Jerusalem, அமெரிக்க அதிபர் டிரம்ப் , US President Trump,  டெல் அவிவ், Tel Aviv,அமெரிக்க துாதரகம், American Union, ஐ.நா. பாதுகாப்புசபை கூட்டம் ,UN Security Council meeting,  பிரதமர் மோடி,Prime Minister Modi, பாலஸ்தீன இந்திய தூதர் அன்டான் அலிஹாஜா ,Palestine Indian ambassador Anton Alahajah,  டிரம்ப்,Trump,

புதுடில்லி: பாலஸ்தீன விடுதலை தான் இந்தியாவின் நிலைப்பாடு என, இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலேம் டிரம்ப் அறிவிப்பு விவகாரத்தில் இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க துாதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக நேற்று ஐ.நா. பாதுகாப்புசபை கூட்டம் நடந்தது. இதில் ஜெருசலேம் நகரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதர் அன்டான் அலிஹாஜா ராஜ்சபா டி.வி. சானலுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். விரைவில் மோடி பாலஸ்தீனம் செல்லஉள்ளார் அது எப்போது என்பது குறித்து முடிவு செய்யப்படவி்லை. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அறிவிப்பு விஷயத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் பாலஸ்தீன விடுதலை என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.இதில் மூன்றாவது நாடு முடிவு செய்யக்கூடாது என்றார்..

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
08-டிச-201717:42:07 IST Report Abuse
K.Sugavanam ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகர் என அமேரிக்கா அங்கீகரித்ததை பற்றி இந்தியாவின் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலில்லை.. ஆனால் பாலஸ்தீன விடுதலை தான் முக்கிய குறிக்கோளாம்.. ஜெருசலேம் பற்றி ஒரு வார்த்தையும் காணோம்.. பாலஸ்தீனம் இன்னும் விடுதலை அடையவில்லையா?அப்புறம் எப்படி ஐநாவில் அங்கத்தினராக அங்கீகாரம் கொடுத்தார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201712:38:52 IST Report Abuse
Pasupathi Subbian அடுத்த நாட்டின் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது தேவையற்றது
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
08-டிச-201712:36:38 IST Report Abuse
Narayan கிறித்துவம் - 150 + நாடுகள். -பவுத்துவம் - 15 + -மொஹம்மதியர் - 51 + -சனாதன இந்து மதங்கள் - 0 -யூதர் - 0 பாவம் ஸீரோ இருக்கிறவங்களுக்கு முதல்ல ஒண்ணாவது கொடுங்கையா. அவுங்க மட்டும் என்ன இளிச்சவாயன்களா.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
08-டிச-201712:31:42 IST Report Abuse
Narayan பாலஸ்தீனம் வேண்டாம். 51 நாடுகள் வைத்து இருப்பவர்களுக்கு எதற்கு இன்னொரு நாடு. பூஜ்யம் நாடுகள் வைத்து இருக்கும் யூதர்களுக்கும் இந்துக்களுக்கும் தான் ஒரே ஒரு நாடாவது குடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
08-டிச-201712:00:37 IST Report Abuse
Sampath Kumar ஊசிமணி அய்யா பாலஸ்திநீயர்கள் தீவிரவாதத்தை கை வீட வேண்டும் என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் இஸ்ரயேலை என்ன சொல்வீர்கள் தீவிரவாதத்தின் தந்தை என்றா ? உலக நாடுகளில் தீவிரவாதத்தை அமெரிக்காவை வைத்து சதிராடும் இவர்களை என்னவென்று சொல்வீர்கள் ??? வரலாற்றை முதலில் படியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-டிச-201711:53:59 IST Report Abuse
Karuthukirukkan நிலைபாடா ?? இருந்தா தானே சொல்ல முடியும் .. பொருளாதாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை அப்படியே காப்பி அடிச்சாச்சு .. வெளிநாட்டு கொள்கையில் என்ன செய்வது என்று இப்போது தான் பழகி கொண்டு இருக்கோம் .. நினைத்தவாறு செய்து கொண்டிருக்கோம் .. கடைசியில் அதுக்கும் காங்கிரஸ் நிலைப்பாடு தான் எடுக்கணும் போல ..
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
08-டிச-201711:49:59 IST Report Abuse
Devanatha Jagannathan நம்ம முன்னேற்றம் தான் முக்கியம் ஊர் பிரச்சனை வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
08-டிச-201711:10:22 IST Report Abuse
Jayvee ஜெரசுலாத்தை யூதர்களுக்கு kodukkavendum. இஸ்லாமியர்களை உள்ளேய vidakoodaathu.. ஏனென்றால் Jerusalem இப்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் ullathu.. (இதுதான் ராமஜென்ம பூமியில் இங்குள்ள திருட்டு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு)
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
08-டிச-201710:14:53 IST Report Abuse
Sukumaran Sankaran Nair மதசார்பற்ற கொள்கை என்பது இன்று புதிய சிந்தனையாளர்களால் தகர்த்தெடுக்கப்படுமோ எனும் பீதி அரசியல் வாதிகளை குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பழைய சித்தாந்தங்கள் இன்றைய தலைமைத்துவ ஆளுமைக்கு உகந்ததாக இல்லை. அணையப்போகும் விளக்கு விட்டு விட்டு எரிந்தபின் இறுதியான ஒளி சற்று பிரகாசமாக கக்கிய பின்னர் எப்படி நின்றுவிடுமோ அப்படி பழமையான சித்தாந்தங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றனவாக இல்லை. இருக்கின்ற பிரச்சனைகளை தீர்க்க வழி தெரியாவிட்டாலும்,சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்கிற பாணியிலான அரசியல் தலைவர்கள்,உலக அரங்கில் யூதர்களுக்கும்,கிருத்துவ ,இஸ்லாம் பெரும்பான்மையிலான மக்களை தூண்டிவிட்டு வழிபாட்டு தலங்களையும் விட்டுவைப்பதில்லை என்று விழிபிதுங்கி தவிப்புக்குள்ளாகி விட்டனர். மனிதனை மாற்றவல்ல சக்தி அவனுடைய உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்ட ஆன்ம ஒளிவிளக்கு. அதை தூண்டிவிட்டால் ஒழிய,அர்த்தமுள்ள உரையாடல் எதுவுமே எடுபடாது. ஆண்டவன் நமக்கு விதித்துள்ள இன்றைய திட்டங்கள் உலகநீதிமன்றத்தினால் உலக மக்களுக்கு கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது.உலக சீர்திருத்தம் என்பது நாளைய தலைமுறைக்கு நாம் அர்ப்பணிக்க வேண்டியது நமது தவிர்க்கவியலாத சேவைப்பணியாகும்.அதற்கான அரங்கம் நிர்மாணிக்கப்பட்டு,இன்று 200 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது."உலகமே ஒரு நாடு மக்கள் யாவரும் அதன் பிரஜைகள்" பஹாவுல்லா.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-டிச-201710:06:55 IST Report Abuse
Agni Shiva இந்தியா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவேண்டும். இந்த முடிவை இதற்கு இங்குள்ள மதவெறி கிறிஸ்தவ பாவாடை சாமிகளும் ஆதரிப்பார்கள். ஆனால் அவர்களின் ஆதரவிற்க்காக இதை செய்ய கூடாது. இந்தியாவின் நலனிற்க்காக இதை செய்ய வேண்டும். ஹிந்துக்களும் இதையே ஆதரிப்பார்கள். யூதர்கள் எப்போதுமே இந்தியாவின் ஆதரவாளர்கள்..அவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்து மூர்க்கங்களால் துரத்தியடிக்கப்பட்ட பொது அவர்களை அரவணைத்த நாடு பாரதம். அந்த பந்தம் இப்போதும் தொடரப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை