லாரி மோதியதில் சலூன் கடைக்காரர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதியதில் சலூன் கடைக்காரர் சாவு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெருந்துறை: மொபெட் மீது லாரி மோதியதில், சலூன் கடை உரிமையாளர், உடல் நசுங்கி பலியானார். பெருந்துறை அருகே, சென்னியவலசு பகுதியைச் சேர்ந்தவர் கோபால், 54; சலூன் கடை உரிமையாளர். நேற்று மதியம், 1:45 மணியளவில், டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபெட்டில், வீட்டுக்குச் சென்றார். போலீஸ் ஸ்டேசன் ரவுண்டானா அருகில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி, மொபெட் மீது மோதியது. இதில், முன் சக்கரத்தில் அவர் சிக்கினார். அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தார். தூத்துக்குடி, பள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்தில் மீது, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை