மதுபானம் கடத்தி பறிமுதலான வாகனங்கள் ஏலம் விட ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுபானம் கடத்தி பறிமுதலான வாகனங்கள் ஏலம் விட ஏற்பாடு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில், மதுபானம் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும், 13ல் ஏலம் விடப்பட உள்ளன' என, எஸ்.பி., பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், மதுபானம் கடத்திய, ஒரு டாடா ஏஸ் மற்றும் 37 பைக்குகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள், வரும், 13 காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி எஸ்.பி., அலுவலக வளாகத்தில், பொது ஏலம் விடப்பட உள்ளது. டாடா ஏஸை ஏலம் எடுக்க விரும்புவோர், 13 காலை, 9:30 மணிக்குள், முன் வைப்பு தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஏலம் விடப்படும் வாகனங்களை, 13 காலை, 8:00 மணிக்கு, நேரடியாக பார்வையிடலாம். பைக்குகளை ஏலம் எடுப்போர், முழு தொகை மற்றும் 12 சதவீத விற்பனை வரி, 5 சதவீத சேவை வரி செலுத்தி, வாகனத்தை எடுத்து செல்லலாம். மேலும் விபரங்களுக்கு, ஏ.டி.எஸ்.பி., மதுவிலக்கு அமல்பிரிவு, தர்மபுரி என்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது, 04342230759 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை