தொழிற்கல்வி கடன் வழங்கும் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வி கடன் வழங்கும் முகாம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட வங்கியாளர்கள் குழுமம் இணைந்து நடத்திய, தொழிற் கல்வி கடன் வழங்கும் முகாமை, கலெக்டர் கதிரவன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, கல்லூரி கல்வியை தொடர, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம், கல்விக் கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொழிற் கல்வி கடன், 1,227 மாணவ, மாணவியருக்கு, அனைத்து வங்கிகள் மூலம், 21 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கடன் வழங்கும் முகாம், மூன்று நாட்கள் நடக்க உள்ளது. மாணவ, மாணவியர், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையில் செயல்படும் மத்திய உயர் கல்வித் துறையினரால் நடத்தப்படும் வித்யாலட்சுமி (https://www.vidyalakshmi.co.in) என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை