வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுகோள்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: 'வாணியாறு அணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில் சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், வாணியாறு அணை அமைந்துள்ளது. ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வாணியாறு அணைக்கு நீர் வரத்து வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக, அணையின் மொத்த கொள்ளவான, 65.27 அடியில், 50.50 அடியில் தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு, 172 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால், அணை நிரம்பவில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. ஏற்கனவே, நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நெல் நாற்றுக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம், விவசாயிகள் நெல் நடவு செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும், அணையில் இருந்து வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டி, ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை ஆகிய, ஐந்து ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை