கிருஷ்ணகிரியில் நாளை தேசிய லோக் அதாலத்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நாளை தேசிய லோக் அதாலத்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, தேசிய லோக் அதாலத் கூட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை வகிக்கிறார். வழக்கறிஞர் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட நீதிபதியும், மக்கள் நீதிமன்ற தலைவருமான அறிவொளி வரவேற்கிறார். இதில் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி, முதன்மை சார்பு நீதிபதி ஜெயஸ்ரீ, மோட்டார் வாகன இழப்பீடுத் தீர்ப்பாயம் சிறப்பு சார்பு நீதிபதி லீலா, கூடுதல் சார்பு நீதிபதி சசிகலா, நீதித்துறை நடுவர் எண் 2 ஜெயப்பிரகாஷ் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் வழக்கின் தன்மையை பொறுத்து, நீதி பெறலாம். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தஸ்னீம் நன்றி கூறுகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை