கொடி நாள் வசூல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடி நாள் வசூல் துவக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கொடி நாள் வசூலை, கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்தார். முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக, டிச., 7ல் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடியை விற்று, அதன் மூலம் கிடைக்கும், நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் நிதி, படை வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின் மறுவாழ்வு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கலெக்டர் கதிரவன், கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார். இதேபோல், கிருஷ்ணகிரி ஊர்க்காவல் படை வீரர்களிடம், சேலம் சரக ஊர்க்காவல் படை துணை தளபதி மதியழகன் கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை