கே.ஆர்.பி., அணை ஷட்டர் உடைந்த விவகாரம்: நீதி விசாரணைக்கு ஜி.கே., மணி வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணை ஷட்டர் உடைந்த விவகாரம்: நீதி விசாரணைக்கு ஜி.கே., மணி வலியுறுத்தல்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், ஷட்டர் உடைந்ததற்கு நீதி விசாரணை நடத்தி, தமிழக அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேசினார்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையை பராமரிக்காத அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்டில், பா.ம.க., சார்பில் தொடர் முழக்க போராட்டம், நேற்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் தலைமை வகித்தார்.

மாநில தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது: கே.ஆர்.பி., அணை முதல் ஷட்டர் உடைந்து தண்ணீர் வீணாகி உள்ளது. இதனால், 12 ஆயிரம் ஏக்கர் பாதித்துள்ளது. குடிநீர் பிரச்னை ஏற்பட உள்ளது. இதற்கு, அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடைந்த ஷட்டர் முன், தற்காலிக கதவை பொருத்தி, வெளியேறிய தண்ணீரை சேமித்திருக்கலாம். அதற்கு நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா? தமிழகத்தில், பல இடங்களில் வறட்சி ஏற்பட்ட போதும், இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. ஷட்டர் உடைய என்ன காரணமென, நீதி விசாரணை நடத்த வேண்டும். கடந்த முறை அணையை பராமரிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது, அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேறியுள்ளது. இதனால் பாதித்த விவசாயிகள் எத்தனை பேர் என்பது குறித்து, தமிழக அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, படேதலாவ் ஏரி மற்றும் கே.ஆர்.பி., அணையில் உடைந்த ஷட்டரை பார்வையிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை