யானைகள் அட்டகாசம்: வாழை மரங்கள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானைகள் அட்டகாசம்: வாழை மரங்கள் சேதம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, யானைகள் அட்டகாசத்தால், வாழை மரங்கள் நாசமாயின. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு, நேற்று அதிகாலை, ஆந்திரா மாநிலம், பலமனேர் வனப்பகுதியில் இருந்து, நான்கு யானைகள் வந்தன. வலசை கிராமத்தை சேர்ந்த மொகிலுய்யா, 56, என்ற விவசாயிக்கு சொந்தமான, பத்து ஏக்கர் வாழை தோட்டத்தில் புகுந்த யானைகள், அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்தன. பொதுமக்கள் உதவியுடன் குடியாத்தம் வனத்துறையினர், யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் நாசமானதாக விவசாயி மொகிலுய்யா கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை