வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபருக்கு தர்ம அடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபருக்கு தர்ம அடி

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூரில், வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபருக்கு, தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், நேற்று முன் தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, சாமநகர் பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வீட்டு கதவுகளை தட்டியுள்ளார். கதவு திறக்காதவர்கள் வீடுகளில், 'காலிங் பெல்லை' பல முறை அடித்துள்ளார். இதனால் வெளியே வந்தவர்களை, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பலர் எதிர்த்த போது, அங்கிருந்து ஓட்டம் பிடித்து, அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று, இதே பாணியை கடைபிடித்து, கொள்ளையடிக்க முயன்றார். இதனால், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, அந்த வாலிபரை பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்து, திருப்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர், பீஹாரைச் சேர்ந்த சர்கார், 25, என்பதும், திருப்பத்தூரில் பல மாதங்கள் தங்கியிருந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X