மர்ம விலங்கு கடித்து 32 ஆடுகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம விலங்கு கடித்து 32 ஆடுகள் பலி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, கடந்த ஒரு வாரத்தில், மர்ம விலங்குகள் கடித்து, 32 ஆடுகள் இறந்துள்ளன.

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் காசி, 35, விவசாயி. இவர், 12 ஆடுகள் வளர்த்து வந்தார். வழக்கம் போல், வீட்டின் அருகில் உள்ள கொட்டாயில் ஆடுகளை கட்டி இருந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவு, ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக பார்த்ததில், மர்ம விலங்கு, இரண்டு ஆடுகளை கடித்துக் கொண்டிருந்தது. சத்தம் போட்டதும், மர்ம விலங்கு தப்பியோடியது. வெளியே வந்து பார்த்ததில், இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இதுகுறித்து, திருப்பத்தூர் வனத்துறையில் காசி புகார் செய்தார். நாட்றம்பள்ளி சமூக பாதுகாப்பு தாசில்தார் பிரபுகணேஷ், கால்நடை மருத்துவர் திருஞானம் ஆகியோர் இறந்து கிடந்த ஆடுகளை பரிசோதித்தனர். அதில், சிறுத்தை அல்லது செந்நாய் கடித்து ஆடுகள் இறந்துள்ளது தெரியவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


இதுகுறித்து, சொரக்காயல் நத்தம் கிராம வனக்குழு தலைவர் யாதமுனி கூறியதாவது: சொரக்காயல் நந்தம், நாயனசெருவு, அல்லிகுளம், வளத்திகுளம் ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு வாரத்தில், சிறுத்தை மற்றும் செந்நாய்கள் கடித்து, 32 ஆடுகள் இறந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு, வனத்துறையினர் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், சிறுத்தை, செந்நாய்களை ஊருக்குள் வர விடாமல், வனத்திற்குள் விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X