குஜராத் முதல்கட்ட தேர்தலில் கோடீஸ்வரர்கள்| Dinamalar

குஜராத் முதல்கட்ட தேர்தலில் கோடீஸ்வரர்கள்

Updated : டிச 08, 2017 | Added : டிச 08, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குஜராத் தேர்தல்,Gujarat polls, குரோர்பதிகள், காங்கிரஸ் ,Congress,  பா.ஜ., BJP, விஜய்ரூபானி ,Vijay Rupani, சொத்துமதிப்பு, asset value,

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள சட்டசப தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் நாளை டிச.,9 முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் 70 சதவீதம் பேரும், பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் 78 சதவீதம் பேரும் கோடீஸ்வரர்கள் என தங்களது சொத்துகணக்கு தாக்கல் விவரத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் வேட்பாளர்களில் மூன்று பேர், பா.ஜ., சார்பில் 2 பேர் ஆகியோர் 100 கோடிரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை கொண்டுள்ளனர். தற்போது மாநில முதல்வராக உள்ள விஜய்ரூபானி 3.4 கோடி ரூபாய் சொத்துமதிப்பை காட்டி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குரு தன்னுடைய சொத்து மதிப்புரூ. 141 கோடி என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2012-ம் தேர்தலில் போட்டியிட்ட பலரும் தற்போது மீண்டும் பேட்டியிடுகின்றனர். அவர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்காகி குறைந்த பட்சம் ரூ.50 கோடி முதல் ரூ.15 கோடி க்கு மேல் சொத்துமதிப்பு இருப்பதாக சொத்து விவரங்களில் தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் குஜராத் அரசியல் வாதிகள் தங்களின் சொத்து மதிப்பை வெளிப்படையாக தெரிவிப்பது தங்களின் தகுதியை காட்டுவதாக கருதுகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-டிச-201716:07:14 IST Report Abuse
Loganathan Kuttuva பெருநகரங்களில் ஒரு பிளாட் வைத்திருப்பவர்களே கோடீஸ்வரர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
08-டிச-201715:00:01 IST Report Abuse
Rajan குஜராத் மாநிலத்தில் கோடீஸ்வரர்கள் MLa வேட்பாளர்கள் என்பது ஆச்சர்யம் இல்லை... அது ஒரு தொழில் சார்ந்த மாநிலம்..நம் ஊரிலேயே கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் ..அது தான் ஆச்சர்யம்...அதுவும் வெறும் விவசாயிகள் என்று தொழில் போட்டுகொண்டு....
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-டிச-201713:10:18 IST Report Abuse
Sanny உண்மையில் இவர்கள் தங்கள் சொத்துக்களின் மதிப்பை சொல்லுகிறார்களா? அல்லது வென்றபின் அவர்களின் டார்கெட் என்ன என்று சொல்லுகிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-டிச-201712:51:40 IST Report Abuse
S.Baliah Seer எல்லாம் தெரிந்தது தானே சார்.தேர்தல் ஒரு வியாபாரம்.போட்ட முதலுடன் கந்து வட்டி ,மீட்டர் வட்டிக்கு மேல் பணம் சம்பாதித்து விடுவார்கள்.இதில் மாமூல் வேறு.இதனால்தான் வேட்பாளர்களில் பெரும்பாலோர் கோடிகளும்,கேடிகளுமாக இருக்கிறார்கள்.இதில் ஏழைகளுக்கும் ,நல்லவர்களுக்கும் இடமேது?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201712:12:21 IST Report Abuse
Pasupathi Subbian தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் இவர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதில் தவறொன்றும் இல்லை . ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் , பதவியை வைத்து soththu சேர்ப்பது , வருமானம் பார்ப்பது என்று இல்லாமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
08-டிச-201711:57:14 IST Report Abuse
அறிவுடை நம்பி ஆகா மொத்தம் கோடிஸ்வரனுங்க எல்லாம் MLA ஆகி பிச்சைக்கார மக்களை ஆள போறாங்க.சபாஷ்..வாழ்க இந்திய ஜனநாயகம்....
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
08-டிச-201710:17:22 IST Report Abuse
krishnan இந்த பணம் எல்லாம் யாரை சுரண்டி சம்பாதித்தது . ஏழைகளே இல்லயா அவர்கள் யாரையும் எந்த கட்சியும் நிறுத்தாதே
Rate this:
Share this comment
Cancel
Naan Avaal Illai - cuddalore,இந்தியா
08-டிச-201709:49:00 IST Report Abuse
Naan Avaal Illai இந்த தேர்தலில் மோடி முடிவுகள் வரும். குஜராத் வளர்ச்சி என்று சொல்லு இன்ரு
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
08-டிச-201708:04:00 IST Report Abuse
தேச நேசன் தேர்தலில் சொத்துக்கணக்குக் காண்பிப்பது வெறும் போலி நாடகமாகிவிட்டது துணைவி இணைவு பிணைவி என .. பினாமிகள் பெயரில் சொத்துக்களைக்குவித்துவிட்ட பிறகு என்ன கணக்கு காட்டி என்ன பயன்? அரசு அதிகாரிகள் மனைவி பெயரில் விவசாய நிலங்களை வாங்கி லஞ்சப்பணத்தை வரியேயில்லாத விவசாய வருமானமாகக் கணக்கு காட்டுகிறார்கள் அதனைத் தடுக்க சட்டம் கொண்டுவர முடியாத நிலை ஏனெனில் அரசு ஊழியர்களை பகைத்துக்கொண்டால் ஆட்சி சில நாள்கூட நிலைக்காது
Rate this:
Share this comment
சென்னை பாலன் - Chennai,இந்தியா
08-டிச-201708:17:59 IST Report Abuse
சென்னை பாலன் அருமை நண்பரே தங்களை நாங்கள் பார்த்ததில்லை , தங்கள் நாவில் தமிழ் தாய் நடனமாடுகிறாள் . துணைவி இணைவு பிணைவி , ஆகா கேட்கவே தேன்போல் இனிக்கிறது ....
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
08-டிச-201716:51:37 IST Report Abuse
BoochiMarunthuமத்திய அரசு மாநில அரசு உங்கள் கையில் தானே இருக்கு ஏன் ஒன்னும் பண்ணல ? காங்கிரஸ் அரசு வழக்கு போட்டு பிடித்து வைத்த மாறன் இப்போ வழக்கில் இருந்து விடுதலை . ஏன் பிஜேபி அரசு இணைவி பிணைவி ஆதாரமும் கொடுக்கல ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை