உயிரி உரம் தயாரித்தல் குறித்த களப்பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிரி உரம் தயாரித்தல் குறித்த களப்பயிற்சி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: நாமக்கல், தனியார் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த, இரண்டாமாண்டு மாணவர்கள், 12 பேர், ராசிபுரம் வட்டாரத்தில், 90 நாட்கள் தங்கி, வேளாண் அலுவலகம், உள்ளூர் விவசாயிகள் மற்றும் உயிரி உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் களப்பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சேலம் அருகே, சீலநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயிரி உரத்தொழிற்சாலைக்கு சென்றனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகவேல் தலைமை வகித்தார். பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்து கண்டறியும் முறை, மண்வள அட்டை, பாசன நீரில் உள்ள உப்பின் அளவு, கார அமிலத்தன்மை கண்டறியும் முறை பற்றி அறிந்து கொண்டனர். வேளாண் அலுவலர் தியாகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X