பூச்சி விளக்குப் பொறி செய்முறை விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூச்சி விளக்குப் பொறி செய்முறை விளக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: புதுச்சத்திரம் வட்டார வேளாண் அலுவலகம் சார்பில், வட்டார விவசாயிகளுக்கு, சூரிய ஒளியில் இயங்கும் பூச்சி விளக்குப் பொறி குறித்து, செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் பேபி கலா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் ஜெயமாலா பேசியதாவது: இதில் உள்ள மின்கலன், சூரியனில் இருந்து ஆற்றலை சேமித்து, இரவில் நீல நிறத்தில் எரிகிறது. விளக்குக்கு கீழே உள்ள தட்டில் தண்ணீர் மற்றும் அதன் மேல் எண்ணெய் ஊற்றப்படுகிறது. ஒளியில் ஈர்க்கப்பட்ட பூச்சிகள், அந்த தட்டில் விழுந்து, எண்ணெயின் காரணமாக பிடித்து வைக்கப்படுகிறது. இதை, வேறு இடத்திற்கு எடுத்துச்செல்வது எளிது. சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. தானாக இயங்கும் இயந்திரம். தண்டு துளைப்பான், பழந்துளைப்பான், இலைச்சுருள் பூச்சி என, அனைத்து பூச்சிகளையும் எரிக்கிறது. மேலும், பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, செயற்கை மருந்துகளின் தாக்கத்தில் இருந்தும் பயிர் மற்றும் நிலம் மீட்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை