முன்னாள் படைவீரர்கள் நலம்: கொடிநாள் நிதி வசூல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் படைவீரர்கள் நலம்: கொடிநாள் நிதி வசூல் துவக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: கொடிநாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நிதி வசூலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக, கொடிநாள் நிதி வசூலிக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா, நாமக்கல்லில் நடந்தது. போலீஸ் எஸ்.பி., அருளரசு, தலைமை வகித்து, பேசியதாவது: முப்படையினர் கொடி நாள், ஆண்டுதோறும் டிச., 7ல் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டுக்கு சேவை செய்ய, இளம் ஆண், பெண்களை ராணுவத்துக்கு அனுப்பி வைக்கும் உன்னத மரபை தமிழகம் கொண்டுள்ளது. ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு, முன்னாள் படைவீரர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும், பல்வேறு திட்டங்களுக்காக, கொடி நாள் நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், இலக்கை தாண்டி நாமக்கல் மக்கள் நன்கொடை அளிக்கின்றனர். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, ஊர்க்காவல் படையினர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொடிநாள் நிதி வசூலித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை