பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர் துளசிமணி தலைமை வகித்தார். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் ஊதியம், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியம் வழங்க வேண்டும். முறையான பென்ஷன் வழங்க வேண்டும். 2016, ஜன.,1 முதல் ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். மே மாதம், கோடை விடுமுறை மற்றும் பறிக்கப்பட்ட சனிக்கிழமை விடுமுறைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

* திருச்செங்கோட்டில், தமிழ்நாடு அங்கன்வாடி அரசு ஊழியர் சங்கம் சார்பில், தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, வட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X