சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், எக்ஸல் பொறியியல் கல்லூரி மற்றும் எக்ஸல் ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மதன் கார்த்திக் தலைமை வகித்தார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் சம்பத், முதன்மையர் கிறிஸ்டியன் ஜான்சன் ஆகியோர் வாழ்த்தினர். எக்ஸல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகநாதன் பேசினார். ஈரோடு, எஸ்.ஆர்.சி., சர்க்கரைநோய் மருத்துவ மைய முதுநிலை ஆலோசகர் பவதாரிணி பேசுகையில், ''உணவு பழக்கம் காரணமாகவே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. சத்தான உணவை சரிவிகிதத்தில் உட்கொள்வதன் வாயிலாக, ஆரோக்கியமாக இருக்கலாம். 30 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். எக்ஸல் பார்மசி கல்லூரி முதல்வர் மணிவண்ணன், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் அய்யப்பன், எக்ஸல் மருத்துவமனை டாக்டர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை