குடிநீர் வழங்காததை கண்டித்து மொபைல்போன் டவரில் ஏறி போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வழங்காததை கண்டித்து மொபைல்போன் டவரில் ஏறி போராட்டம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமகிரிப்பேட்டை: பட்டணம் முனியப்பம்பாளையத்தில், குடிநீர் வழங்காததை கண்டித்து, ஐந்து இளைஞர்கள் மொபைல் போன் டவரில் ஏறி, போராட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, பட்டணம் முனியப்பம்பாளையம் பஞ்., ஐயம்பாளையத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், மூன்று மாதங்களாக, சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை; இதுகுறித்து, ஊராட்சி மற்றும் ராசிபுரம் ஒன்றிய அலுவலகங்களில், பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என, கூறப்படுகிறது. நேற்று காலை, 8:30 மணியளவில் இப்பகுதியை சேர்ந்த, தட்சிணாமூர்த்தி, 30, மோகன்ராஜ், 32, மனோகரன், 37, சரவணன், 24, மணி, 28, ஆகியோர், 'முறையாக குடிநீர் திறந்து விட வேண்டும்' என்ற கோரிக்கையுடன், அங்குள்ள பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் டவரில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த, பஞ்., செயலாளர் பச்சமுத்து, பி.டி.ஓ., மீராபாய், தாசில்தார் ஷாகுல் ஹமீது, டி.எஸ்.பி., ஈஸ்வரமூர்த்தி மற்றும் தீயணைப்பு துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, 10:30 மணியளவில் அவர்கள் கீழே இறங்கினர். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை