குமாரபாளையத்தில் மணல் திருட்டு லாரி பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமாரபாளையத்தில் மணல் திருட்டு லாரி பறிமுதல்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. குமாரபாளையம் அருகே, தேவூர் அண்ணமார்கோவில் பகுதியில், மணல் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், தேவூர் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணல் சுமையுடன் வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 44, என்பவருக்கு சொந்தமானது, அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், 37, ஓட்டி வந்ததும் தெரிந்தது. வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை