புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காவிரி பாலத்தில் மின் விளக்கு வசதி தேவை: குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, முசிறிக்கு செல்லும் வழியில், பெரியார் பாலம் உள்ளது. மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவை எரிவதில்லை. இரவு நேரத்தில் வழிப்பறியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தில் பெரும்பாலானோர் அதிகாலை நேரம் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். எனவே, பாலத்தில் மின்கம்பங்களில் விளக்கு பொருத்த வேண்டும்.
- ஆ.ஜோதிவேல், தண்ணீர்பள்ளி.


இறைச்சி கழிவுகளால் தொல்லை: கரூர் பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை ஆகிய பகுதிகளில் கோழி இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள் உள்ளன. கடைகளில் மீதியாகும், இறைச்சி கழிவுகளை வெளியில் மூட்டையாக கட்டி வைத்துச் செல்கின்றனர். இதை சாப்பிட ஏராளமான நாய்கள் வருகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை, நாய்கள் விரட்டி கடிக்கின்றன. இறைச்சி கழிவுகளை வெளியில் வைக்கும் கடைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ஆர்.நகுல்சாமி, தான்தோன்றிமலை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை