ரூ.60.12 லட்சம் கொடி நாள் வசூல் இலக்கு: பேரணியில் கரூர் கலெக்டர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.60.12 லட்சம் கொடி நாள் வசூல் இலக்கு: பேரணியில் கரூர் கலெக்டர் தகவல்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், கொடி நாள் வசூல், 60.12 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் கோவிந்தராஜ் பேசினார்.

கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், கொடி நாள் வசூல் துவக்கம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் நலன் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்து கூறியதாவது: கடந்த ஆண்டு, 54.65 லட்சம் ரூபாய் கொடி நாள் வசூலானது. நடப்பாண்டில், 60 லட்சத்து, 12 ஆயிரத்து, 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் மட்டும் திருமண நிதி, மனநலம் குன்றியவர்களுக்கான நிதி உதவி என, 74 முன்னாள் ராணுவ வீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு, 6.60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு நிதியாக வங்கிக்கடன் வட்டி மானியம் என, 14 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 98 ஆயிரம் ரூபாய், பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகையாக, 12 மாணவ, மாணவியருக்கு, 3.21 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 12 பேருக்கு, ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 905 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜ்மோகன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X