காய்ச்சல் பரப்பும் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்ச்சல் பரப்பும் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்: அங்கன்வாடி மையத்தில், சுகாதார சீர்கேட்டால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால், குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப, பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

கரூர், பசுபதீஸ்வரர் கோவில் பின்புறத்தில், பசுபதிபுரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆரம்ப கல்வியுடன் சத்துணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், சுகாதார சீர்கேட்டால் பல குழந்தைகள் காய்ச்சலால், பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. கொட்டும் மழை நீர்

இது குறித்து, குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது: குழந்தைகள், பாதுகாப்பற்ற கட்டடத்தில் படித்து வருகின்றனர். இங்கு, வகுப்பறை, சமையல் அறைகளில் மேற்கூரை கான்கிரீட் தளம் வலுவிழந்து உள்ளதால், மழை பெய்யும் போது கட்டடத்திற்குள் நீர் கொட்டுகிறது.

பணியாளர்கள் தவிப்பு: மழை பெய்யும் நேரத்தில், விடுமுறை அளிக்கப்பட வேண்டி உள்ளது. வகுப்பறைக்கு உள்ளே, கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்லும் குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிப்பறை முழுவதும் செப்டிக் டேங்க் கழிவுநீர் தேங்குகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால், குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், கொசு உற்பத்தி மையமாக உள்ளது. கொசுக்கடியால், பல குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விஷால் என்ற, 4 வயது குழந்தை டெங்குவால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமாகி மையம் வந்து உள்ளார். இதை பார்த்த பலர், குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். மேலும் சில குழந்தைகளுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஐந்து குழந்தைகள் மட்டுமே மையத்தில் உள்ளனர். இது குறித்து பல முறை புகார் கொடுத்தும், எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உரிய நடவடிக்கை: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கமணி கூறுகையில், ''உடனடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை