11 lakh people stole from Railways in 2016 | ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது

Added : டிச 08, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ரயில்வே,Railway,  ரயில்வே போலீஸ், Railway Police,ஏசி கோச், AC Coach,  பிரிமீயம் குவாலிட்டி,Premium Quality,   டவல்கள், Towel,போர்வைகள், Blankets, மின்சார விளக்குகள்,Electric Lights,  பேன்கள் ,fans, திருட்டு, Theft,

புதுடில்லி: நாடு முழுவதும் ரயில்வே பொருட்களை திருடியதாக 2016-ம் ஆண்டில் 11 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இருப்பினும் ரயில்களில் உள்ள பொருட்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் ரயில்வே பொருட்களை திருடியதாக நாடு முழுவதும் 11 லட்சம் பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா 2.23 லட்சம் என்ற எண்ணிக்கையில் முதலாம் இடத்தையும், 1.22 லட்சம் எண்ணிக்கையுடன் உ.பி ., 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. ம.பி மாநிலத்தில் 98,594 பேரும், தமிழ்நாட்டில் 81,408 பேரும், குஜராத்தில் 77,047 பேர்கள் எனமுதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
இது குறித்த ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது: பிரிமீயம் குவாலிட்டி கொண்ட இரும்பு மற்றும் தாமிரம் அடங்கிய பொருட்களே திருடர்களின் இலக்காக உள்ளது. மேலும் ஏசி கோச்களில் பயன்படுத்தபடும் டவல்கள், போர்வைகள், மின்சார விளக்குகள், பேன்கள் உள்ளிட்டவையும் திருடி செல்கின்றனர்.

எலக்ட்ரிக் ரயில்களில் மின்சாரத்தை தடைசெய்து அதன் வயர்களை திருடிச் செல்வதன் மூலம் வெளி மார்க்கெட்டுகளில் நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர். சமீபகாலத்தில் தேஜாஸ் எக்ஸ் பிரஸ் மற்றும் மகாமானா எக்ஸ் பிரஸ் ரயில்களில் இருந்து தரை விரிப்புகள் திருடுபோயுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் திருட்டு சம்பவங்களை குறைக்கும் வகையில் ரயில்வே சக்கரங்களில் உபயோகிக்கப்படும் மெட்டல் பிரேக் பிளாக்கிற்கு பதிலாக பைபர் பிளாக்கு கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
08-டிச-201720:08:34 IST Report Abuse
Gnanasekaran Vedachalam 11 லச்சம் பேர்வழிகள் ரயிலில் திருடி கைது செய்யப்பட்டார்கள் என்பது ஒரு புறம் வேதனையாக உள்ளது மற்றுஒரு புறம் ரயிலில் பராமரிப்பு பணிகள் மிக முக்கியம் ஒவ்வரு ரயிலுக்கும் கட்டுப்பட்டு அதிகாரி மக்களின் குறைகளை தீர்க்க அவசியம்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-டிச-201718:40:57 IST Report Abuse
S.Baliah Seer இந்த திருட்டுகளுக்கு ரயில்வே துறையை சார்ந்த சில ஊழியர்கள் காரணமாய் இருப்பார்கள். இவர்கள் துணையில்லாமல் ரயில்வே மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-டிச-201716:55:25 IST Report Abuse
மலரின் மகள் போட்டோவில் இருப்பது கரிப் ரத் கோச் போல தெரிகிறது. வேறு யார் திருட போகிறார்கள், ஊழியர்கள் கான்ட்ராக்டர்கள் தான் பெரியளவில் என்றும் மிக குறைந்த அளவில் அதுவும் விலை குறைந்த பொருட்களை மட்டுமே சில சாமானியர்கள் எடுத்து செல்கிறார்கள் என்றும் அடுத்தபடியாக குப்பை பெருக்குவதற்கும் தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்கும் வரும் சிலர் ஊழியர்களுக்காக எடுத்து செல்வதாகவும் ஏற்கனவே செய்திகள் உண்டு. உண்மையான திருடி என்றால் பயணிகளின் உடைமைகளை தற்போது ஸ்மார்ட் போன்களை திருடும் இளைஞர்கள் தான். சங்கிலி பறிப்பு என்று கூட உண்டு. இது ரியல் திருட்டு. வர்சுவல் திருடு தான் மிக மிக அதிகம். அதை செய்பவர்கள் பயணியர்களிடருந்து பணத்தை பிடுங்கி கொண்டு சீட் ஒதுக்கி தரும் பரிசோதகர்கள், தட்கல் டிக்கெட் புக் செய்வோர் என்று பலர் இருக்கிறார்கள். மிகப்பெரிய நிர்வாகத்தின் செயல்கள் வெளிப்படையாக இல்லை. நிறையவற்றை அது தானாகவே திருடுபோய்விட்டதாகவும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூட கூறி முடித்து விடுவார்கள். யாருமே இல்லாமல் டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் என்ஜின்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போதைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. சென்ட்ரலில் இருந்து ரயிலை ஒட்டி சென்று பெரம்பூர் பக்கம் விபத்தை ஏற்படுத்தியது யார் அந்த செய்தி என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X