Senior lawyers shouted at CJI Misra during the Ayodhya hearing. Here's what happened next | நீதிபதியை மிரட்டும் சீனியர் வழக்கறிஞர்கள்: தீபக் மிஸ்ரா வேதனை| Dinamalar

நீதிபதியை மிரட்டும் சீனியர் வழக்கறிஞர்கள்: தீபக் மிஸ்ரா வேதனை

Updated : டிச 08, 2017 | Added : டிச 08, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சீனியர் வழக்கறிஞர்கள், Senior advocate ,நீதிபதி தீபக் மிஸ்ரா ,Judge Deepak Mishra,  சுப்ரீம் கோர்ட், Supreme Court,அயோத்தி, Ayodhya,டில்லி முதல்வர் கெஜ்ரிவால் , Delhi Chief Minister Kejriwal, வழக்கறிஞர் கபில் சிபல், Advocate Kapil Sibal,வழக்கறிஞர்  துஷ்யந்த் தவே, Advocate Dushyant Dave,வழக்கறிஞர்  ராஜிவ் தவான் , Advocate Rajiv Davan,சுப்ரீம் கோர்ட் பார்கவுன்சில், Supreme Court Bar Council,

புதுடில்லி: வழக்கு விசாரணையின் போது வாதாடும் சில சீனியர் வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பாக ஆவேசத்துடன் கூச்சலிடுகின்றனர் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேதனை தெரிவித்தார்.

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 5-ம் தேதியும் , டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கு கடந்த 6-ம் தேதி அன்றும் விசாரணை பரபரப்புடன் நடந்தது. இதில் அயோத்தி வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், , துஷ்யந்த் தவே, ஆகிய இரு சீனியர்கள் வழக்கறிஞர்களும்,ஆஜராகியுள்ளனர்.
அதே போன்று டில்லியில் யாருக்கு அதிகாரம் தொடர்பான வழக்கில் ராஜிவ் தவான் என்ற சீனியர் வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டு வருகின்றார். வாதுரையின் போது இவர்களின் செயல்பாடுகள் மற்றும் நன்னடத்தையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது, சில சீனியர் வழக்கறிஞர்கள் வழக்கில் வெற்றி பெற வேண்டும், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு நீதிபதி முன்பாக மிரட்டல் தொனியில் ஆவேசத்துடன் கூச்சலிடுகின்றனர். இது போன்ற செயல்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாது. இப்படி ஆவேசப்படுவர்கள் திறமையற்றவர்கள், சீனியர் வழக்கறிஞர்களுக்கான தகுதியில்லாதவர்கள் என்பதை தான் காட்டுகிறது. இது போன்ற சீனியர் வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இவர்களை சுப்ரீம் கோர்ட் பார்கவுன்சில் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
08-டிச-201720:53:49 IST Report Abuse
V Gopalan Because of his predecessors would have some kind of weakness or have party/ties sympathisers, hence these advocates try to cross their Lakshman Rekha. More over, Advocate S/Shri Kapil Sibal, Abshek Singhvi, PC et are all from Congress and may be in a hope of getting in the next general election, so try to show their supremacy. Supreme Court has to give some directions those who enjoyed the Ministerial powers should not be allowed to do their professional when their government is no more else five years government rest of the period with the powers of past government ministerial power taste try to threaten the judges. As Chief Justice has rightly pointed out that they have proved their incapability to orgue by shouting in the court, it is proved beyond doubtful by Sibal used temple issue. Suspend from their profession for a minimum period of five years then only will fall in line.
Rate this:
Share this comment
Cancel
gk -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201720:11:55 IST Report Abuse
gk தன் பக்கம் நியாயம் இல்லாதவர்கள்தான் கூச்சலிடுவார்கள். நேர்மையானவர்கள் இன்னும் சிறிது கண்டிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டிய தேவை தற்போது மிகுதியாய் விட்டது.
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
08-டிச-201718:55:26 IST Report Abuse
raja தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தட்டி கேட்பதில் தவறில்லை. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. சேரில் இருப்பதாலே மதிக்க வேண்டும் என்பதல்ல. அதற்கு தக்க வாறு நடக்க வேண்டும். நீதி தவறாத நீதிபதிகள் மதிக்க பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
08-டிச-201718:20:17 IST Report Abuse
Somiah M மயிலே மயிலே என்றால் இறகு போடாது .......................இந்த உண்மை நமக்கே தெரிகிறதே .
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-டிச-201716:53:43 IST Report Abuse
Subburamu Krishnaswamy நடவடிக்கை எடுக்க வேண்டியதை விட்டுவிட்டு அறிக்கை விடுவதால் எந்த வகையிலும் நீதித்துறைக்கு நல்லதல்ல. கடுமையான நடவடிக்கையே இன்றய தேவை. ஒழுக்கம் இல்லாத வழக்கறிஞர்கள் நாட்டுக்கு தேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-டிச-201715:27:10 IST Report Abuse
தங்கை ராஜா நீதியின் தராசு மனசாட்சிக்காக சாயாமல் நடுமுள் நிலை தடுமாறாமல் இருந்தால் யாரும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது.
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201714:22:27 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அப்படி கூச்சல் இடும் ஒருவர் மேல் முதலில் நடவடிக்கை எடுங்கள் பிறகு தானாகவே அடங்கி விடுவார்கள். இவர்கள் வாதாடும் வழக்கில் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுங்கள், அவர்கள் வாதாடுவது அனைத்துமே நீதிக்கு எதிரானது தான்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
08-டிச-201712:19:07 IST Report Abuse
Natarajan Ramasamy சட்டத்தில் கூறப்பட்டதை எடுத்து சொல்லி வாதாட அறிவு வளம் வேண்டும். அது இல்லையென்றால் மற்றவர் பேசுவதை அடக்க தன் குரலை உயர்த்தி , பயமுறுத்தி , வழக்கில் ஜெயிக்க நினைப்பவர்கள் கட்சி பலத்தில் வாதிடுபவர்கள். கவலை படாமல் தீர்ப்பு சொல்லி தான் இவர்களை மதிப்பிழக்க செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08-டிச-201712:01:06 IST Report Abuse
Sridhar அட சத்தம் போடுவதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். மிக அப்பட்டமாக பொய் சொன்ன ஸிரோ சிபலை என்ன செய்யப் போகிறீர்கள்? சன்னி வாரியத்திற்கு வக்கீலாக ஆஜர் ஆகிவிட்டு, எல்லோரையும் ஏமாற்றலாம் என்ற நினைப்போடு இரண்டு மூன்று பேப்பர்களை காட்டி தன் பொய்யை நிலைநாட்ட முயற்சிக்கும் அவரை என்ன செய்யப்போகிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201711:49:09 IST Report Abuse
Pasupathi Subbian இந்த நீதிபதிகளும் முதலில் வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதியாகியவர்கள். இவர்களுக்கு உண்மை எது பொய் எது என்பது தெரியும். இருந்தும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளதால், வெறும் வழக்கறிஞர்களின் வாதத்தை வைத்தே , பல முரண்பாடான தீர்ப்பு வழங்குவது , இவர்களின் மேல் உள்ள நம்பகத்தன்மையை , சோதனை செய்யும்வகையாக உள்ளதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை