சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக, நேற்று கலெக்டர் விவேகானந்தன் தண்ணீர் திறந்து விட்டார்.

பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சின்னாறு அணை மூலம் பாசனம் பெறும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. அதன்படி, தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு வினாடிக்கு, 25 கனஅடி வீதம், 64 நாட்களுக்கு, ஆறு நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் விட்டும், இரண்டு நாட்களுக்கு நிறுத்தியும், அடுத்த 30 நாட்களில், எட்டு நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் விட்டு, இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும். மீதமுள்ள, 46 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஜனவரி, 19 முதல், பழைய ஆயக்கட்டில், ஐந்து ஏரிகளுக்கு ஆற்றின் வழியாக, ஒரு முறை தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஹள்ளி, குஜ்ஜாரஹள்ளி,கொலசனஹள்ளி, பி.செட்டிஹள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஹள்ளி, பேளாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 3,260 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும். எனவே, விவசாயிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், டி.ஆர்.ஓ., சங்கர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர்கள் வெங்கடேஷ், சாம்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை