ஈரோடு, புளியம்பட்டி சந்தைக்கு கால்நடை வரத்து தொடர் சரிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு, புளியம்பட்டி சந்தைக்கு கால்நடை வரத்து தொடர் சரிவு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு, புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தைகளுக்கு, கால்நடைகள் வரத்து தொடர் சரிவில் உள்ளது.

பரவலாக பெய்த மழையால், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு, கடந்த சில வாரங்களாகவே, கால்நடை வரத்து குறைந்து விட்டது. நேற்றை சந்தையிலும், இதே நிலை எதிரொலித்தது. பனிப்பொழிவால், வட மாநில வியாபாரிகள் வருகையும் எதிர்பார்த்த அளவில் இல்லை. மஹாராஷ்டிராவில் பால் விலை, லிட்டருக்கு, ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில வியாபாரிகள் வருகையும் பெருமளவில் குறைந்தது.நேற்றைய சந்தைக்கு, 300 பசுக்கள், 200 எருமைகள், 150 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு வந்தன. பசுக்கள், 16 ஆயிரம் ரூபாய் முதல், 32 ஆயிரம் ரூபாய் வரை, எருமைகள், 18 ஆயிரம் ரூபாய் முதல், 36 ஆயிரம் ரூபாய் வரை, வளர்ப்பு கன்றுகள், 2,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை விற்பனையாகின.


* இதேபோல் ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியிலும், கால்நடை சந்தை நேற்று நடந்தது. தீவனப் பற்றாக்குறை இல்லாததால், அளவுக்கு, இங்கும் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. நேற்று கூடிய சந்தைக்கு, 20 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 150 ஜெர்சி மாடுகள் வந்தன. சிந்து மற்றும் கலப்பின மாடுகள், 16 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வளர்ப்பு கன்றுகள், 3,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை விற்பனையானது.

ஆடுகள் விற்பனை அமோகம்; ரூ.20 லட்சத்துக்கு விற்பனை: புன்செய்புளியம்பட்டியில், வியாழன் தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. சபரிமலை சீசனால், ஆடுகளின் விலை குறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பில், இறைச்சி கடைக்காரர்கள், ஆடு மேய்ப்போர் மற்றும் விவசாயிகள், நேற்று ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ஆனால், ஆடுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வந்தன. இலவச ஆடுகள் வழங்க, கால்நடை துறையினர் வந்ததால், வெள்ளாடு விலை எகிறியது. சந்தைக்கு, 400 வெள்ளாடுகள், 150 செம்மறி ஆடுகள் வந்தன. இதில், ஐந்து முதல், 12 கிலோ எடையிலான வெள்ளாடுகள், 2,500 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை, இதே எடையிலான செம்மறி ஆடுகள், 2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விலை போனது. அனைத்து ஆடுகளும், 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை