மாவோயிஸ்ட்கள் நீதிமன்றத்தில் ஆஜர்: கோஷம் எழுப்பியதால் திடீர் பரபரப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவோயிஸ்ட்கள் நீதிமன்றத்தில் ஆஜர்: கோஷம் எழுப்பியதால் திடீர் பரபரப்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: நீதிமன்றத்தில் ஆஜராக வந்த, மாவோயிஸ்ட்கள், திடீரென கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநில போலீசார், ரூபேஷ், 45, என்ற மாவோயிஸ்ட்டை கைது செய்தனர். திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தயாரித்து, மொபைல்போன் சிம்கார்டு பெற்றதாக, இவர் மீது ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இரண்டு, கோபி, கடத்தூர், அம்மாபேட்டை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒன்று என, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீரமணி, மதுரை கண்ணன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரணை, ஈரோடு நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்றைய விசாரணைக்காக மூவரும், போலீஸ் பாதுகாப்புடன், ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். போலீஸ் வேனில் இருந்து இறங்கிய மூவரும், 'ஆர்.கே நகர் தேர்தலை புறக்கணிப்போம். தமிழக மீனவர் சாவுக்கு காரணம் தமிழக அரசு. மக்கள் விரோத தமிழக அரசை கண்டிக்கிறோம்' என கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை நீதிபதி உமா மகேஸ்வரி விசாரித்து, மூவரும் வரும் ஜன.,3ல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் அவர்கள், போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X