திம்மம்பட்டி பஞ்., செயலாளரை அறையில் வைத்து பூட்டு போட்டு பொது மக்கள் முற்றுகை போராட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திம்மம்பட்டி பஞ்., செயலாளரை அறையில் வைத்து பூட்டு போட்டு பொது மக்கள் முற்றுகை போராட்டம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

குளித்தலை: அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து, பஞ்சாயத்து செயலாளரை அறையில் வைத்து பூட்டி, பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த திம்மம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட ரெத்தினபிள்ளையூர் பொது மக்கள், தங்கள் கிராமத்திற்கு மூன்று மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை; ஓராண்டாக தெருவிளக்கு சரிவர எரிவதில்லை; என, பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நேற்று காலை, 11:50 மணியளவில் காலிக் குடங்களுடன், பொதுமக்கள் புகார் தெரிவிக்க பஞ்., அலுவலகம் வந்தனர். அப்போது, பணியில் இருந்த பஞ்.,செயலாளர் ரேவதி, பிரச்னை குறித்து சரியாக பதிலளிக்காமல், மெத்தனமாக நடந்து கொண்டதால், ஆவேசமடைந்த மக்கள் பஞ்., செயலாளர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி தள பொறுப்பாளர்கள் கனகா, பாலாவதி, கலைச்செல்வி ஆகியோரை, அலுவலக அறையில் உள்ளே வைத்து, பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த, யூனியன் ஏ.பி.டி.ஓ., வெங்கடாசலம், பூட்டிய கதவை திறந்து விடுங்கள்; பிரச்னை குறித்து, பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றார். அப்போது, முதலைகவுண்டனூர் மக்கள், தங்கள் கிராமத்திற்கு குடி தண்ணீர் வழங்கவில்லை எனக்கூறி, ஏ.பி.டி.ஓ.,வை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாசில்தார் கலியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் முன்னாள் பஞ்., தலைவர் மாணிக்கம் ஆகியோர், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். மின் மோட்டார் பழுதானதால், அவை சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும். தெரு விளக்குகள் மாற்றப்படும்; முதலைகவுண்டனூர் கிராமத்திற்கு புதிய குழாய் அமைத்து, குடி தண்ணீர் வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.


ஏ.பி.டி.ஓ., வெங்கடாசலம் கூறியதாவது: ரெத்தினபிள்ளையூர் கிராமத்தில், மின் மோட்டார் பழுதானதால், காயில் கட்டப்பட்டு தண்ணீர் வழங்கப்படும். தெருவிளக்குகள் விரைவில் பொருத்தப்படும். முதலை கவுண்டனூரில் தங்காலிகமாக, 100 மீட்டர் புதிய குழாய் அமைக்கப்பட்டு குடி தண்ணீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை