நடிகை ஜோதிகா மீது வழக்கு: ஜனவரி 11க்கு ஒத்திவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை ஜோதிகா மீது வழக்கு: ஜனவரி 11க்கு ஒத்திவைப்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க கோரும் வழக்கு வரும், ஜன.11க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா, நாச்சியார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரில், ஜோதிகா பேசும் வசனம் ஆபாசமாக உள்ளதாக, இந்திய குடியரசு கட்சி (அ) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன், கரூர் ஜே.எம் 2 நீதிமன்றத்தில் கடந்த, 27ல் வழக்கு தொடர்ந்தார். அதில், நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பாக்கியம், 'ஜோதிகா பேசிய வசனத்தால், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,' என்று கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தாக்கல் செய்யும்படி கூறி, வழக்கு விசாரணையை வரும் ஜன.11க்கு ஒத்திவைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை