அரசு செவிலியர் விடுதியில் 33 பேருக்கு வாந்தி, மயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு செவிலியர் விடுதியில் 33 பேருக்கு வாந்தி, மயக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: அரசு செவிலியர் விடுதியில் தங்கியிருந்த, 33 பேருக்கு, திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சேலம், இரும்பாலை அருகேவுள்ள அரசு மருத்துவமனை செவிலியர் விடுதியில், 300க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, உணவில் கோழிக்கறி வழங்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, திடீரென பலருக்கும், வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பயிற்சி செவிலியர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 20 பேர் புறநோயாளிகளாக சிகிச்சையளித்து அனுப்பிவைக்கப்பட்டனர். பாதிப்புகள் அதிகமாக இருந்ததால், காயத்ரி, 19, சூர்யா, 21, அபிநயா, 24, கஜலட்சுமி, 24, இளவரசி, 20, நந்தினி, 20, நிவேதா, 20, முத்தமிழ், 20, பவித்ரா, 20, ஹேமலதா, 20, ஜெயஸ்ரீ, 20, கீர்த்தனா, 20, மதலைமேரி, 20, ஆகியோர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை