கல்வி உதவித்தொகை விபரம் சேகரிப்பு: வெற்று 'சிடி' ஒப்படைப்பால் அதிர்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை விபரம் சேகரிப்பு: வெற்று 'சிடி' ஒப்படைப்பால் அதிர்ச்சி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: மாணவியர் கல்வி உதவித்தொகை விபரங்களுக்கு பதில், வெற்று 'சிடி'க்களை, தலைமையாசிரியர்கள் வழங்கியதால், கல்வி அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு, பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில், பள்ளி தலைமையாசிரியர்களிடம், தகுதி வாய்ந்த மாணவியரின் விண்ணப்ப படிவ விபரங்கள் கோரப்பட்டிருந்தன. அவர்கள், 'சிடி'யாக பதிவு செய்து வழங்கினர். இவற்றை கொண்டு, மாவட்டம் முழுவதும் விபரங்களை தொகுக்கும் பணியில், கல்வி அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, பல, 'சிடி'க்களில், விபரங்கள் பதியப்படாமல், காலியாக இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரும்பாலான தலைமையாசிரியர்கள், இப்பணிகளில் நேரடியாக ஈடுபடாமல், வெளியாட்களிடம் ஒப்படைப்பதால், இத்தவறு நடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சேலம் கல்வி மாவட்ட அலுவலர் தங்கவேல், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பெண் கல்வி ஊக்கத்தொகை விபரங்கள், கடந்த வாரம் பெறப்பட்டன. அதில், சேலம் கல்வி மாவட்டத்தில் மட்டும், 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெற்று, 'சிடி'யாக வழங்கப்பட்டுள்ளன. அப்பள்ளிகள், உடனடியாக விபரங்களை முழுமையாக பதிவு செய்து, அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை