ஓமலூர் அருகே நான்கு சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூர் அருகே நான்கு சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: ஓமலூர் அருகே, அனுமதியின்றி செயல்பட்ட நான்கு சாயப்பட்டறைகள், இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சேலம் மாவட்டம், ஓமலூர், எம்.செட்டிப்பட்டி, பட்டகாரத்தெருவில், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் தலைமையில், வருவாய், மின்வாரிய அதிகாரிகள், நேற்று காலை ஆய்வு நடத்தினர். அப்போது, உலகநாதன், ரமேஷ், வெங்கட்ராமன், மல்லிகாராஜ் ஆகியோரின் வீட்டுக்குள், பெரிய அடுப்புகள் வைத்து, சுத்தப்பட்டுக்கான சாயப்பட்டறையை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரமேஷ், சாயப்பட்டறை கழிவுநீரை, பெரிய பள்ளம் தோண்டி, அதில், தேக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு, நான்கு பட்டறைகளும், பொக்லைன் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை