ஏற்காட்டில் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி: சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்காட்டில் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி: சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ஏற்காட்டில், சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரவிவருவதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில், கேர்மாளம் பகுதியில், இரு நாட்களுக்கு முன், இளைஞர்கள் காரில் சென்றபோது, சாலையோரம் சிறுத்தை நின்றுகொண்டிருந்தது. அவர்கள், தங்களிடமிருந்த மொபைலில் வீடியோ எடுத்தனர். அது, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர், வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில், சிறுத்தை நடமாடுவதாக பதிவு செய்துவருகின்றனர். இதை பார்க்கும் மக்கள், சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். சேலம் உதவி வனபாதுகாவலர் குமார் கூறுகையில், ''ஏற்காட்டில், சிறுத்தை நடமாடுவதாக, சமூக வலைதளங்களில், சிலர் தகவல் பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறு. மாவட்ட வனப்பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இல்லை. நாங்களும், தொடர்ந்து ஆய்வு செய்கிறோம். அதனால், மக்கள், சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை