4 மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளிக்கு 100 சதவீதம் மாணவியர் வருகை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளிக்கு 100 சதவீதம் மாணவியர் வருகை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வேலூர்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளியில், மாணவியர் வருகை, 100 சதவீதமாகியுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சங்கரி, மணிஷா, தீபா, ரேவதி ஆகியோர், பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்களை, ஆசிரியர் திட்டியதால் கடந்த மாதம், 24ல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ., வேணுசேகரன், அரக்கோணம் டி.எஸ்.பி., குத்தாலிங்கம் தலைமையில், நான்கு தனிப்படையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட முதல்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில், குழுவினர் விசாரணை நடத்தி, 100 பக்க அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த பள்ளியில், 1,322 மாணவியர் படித்து வந்தனர். நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, பயத்தால் மாணவியர் வருவது பாதியாக குறைந்தது. இதையடுத்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உளவியல் நிபுணர்கள் தலைமையில், மாணவியருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதனால், 1,290 மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அதேசமயம், தற்கொலை செய்து கொண்ட மாணவியருடன், பிளஸ் 1 படித்து வந்த, 32 மாணவியர் மட்டும் வரவில்லை. இதையடுத்து, சென்னை குழந்தைகள் நலம் உளவியல் ஆலோசகர் யசோதா தலைமையிலான குழுவினர், பள்ளிக்கு வந்து மூன்று நாட்கள், 32 மாணவியருடன் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். அதேபோல், அவர்களது பெற்றோருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. பின்னர், அந்த மாணவியரும் நேற்று முதல் பள்ளிக்கு வரத்துவங்கினர். இதனால் பள்ளியில் மாணவியர் வருகை, 100 சதவீதமானது. இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை