அஞ்சலக சேமிப்பு கணக்குடன் ஆதார் இணைக்க எளிய வழி: அதிகாரி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சலக சேமிப்பு கணக்குடன் ஆதார் இணைக்க எளிய வழி: அதிகாரி தகவல்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: ''அஞ்சலக சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைக்க, பேப்பரில் விவரங்களை எழுதி, தபால் பெட்டிகளில் போடலாம்,'' என, வேலூர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் விஜயா கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அனைத்து வகையான அஞ்சல் கணக்குளை, தங்கள் மொபைல் போன், ஆதார் எண்களுடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் அஞ்சலக கோட்டத்தில், ஒரு தலைமை தபால் நிலையம், 20 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இதில், மூன்று லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. பெரும்பாலான கணக்குகளில், மொபைல் போன் எண், ஆதார் எண் இணைக்கவில்லை. எனவே, இவற்றை இணைக்க வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், வெள்ளைத்தாளில், தங்கள் கணக்கு எண், கணக்கு உள்ள கிளையின் பெயர், ஆதார் எண், மொபைல் போன் எண் ஆகியவற்றை எழுதி, அருகில் உள்ள தபால் பெட்டிகளில் போட்டு விடலாம். இதன் மூலம், சேமிப்பு கணக்குடன் ஆதார் எண், மொபைல் எண் இணைக்கப்படும். மேலும், வேலூர் தலைமை தபால் நிலையம், 20 கிளை தபால் நிலையங்களில் டிராப் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளன. அதிலும், வாடிக்கையாளர்கள் ஆதார் விவரங்களை போடலாம். இதற்கான கடைசி நாள், வரும், 31 ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
09-டிச-201710:46:44 IST Report Abuse
JAYARAMAN I thought it is true for all over the country. Now i understand, it is only applicable to velur.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை