4 'இன்ச்' தங்க கிறிஸ்துமஸ் மரம்: ஆம்பூர் தொழிலாளி அசத்தல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 'இன்ச்' தங்க கிறிஸ்துமஸ் மரம்: ஆம்பூர் தொழிலாளி அசத்தல்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆம்பூர்: ஆம்பூரில், நகை செய்யும் தொழிலாளி ஒருவர், நான்கு 'இன்ச்' உயரத்தில், தங்க கிறிஸ்துமஸ் மரத்தை செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் தேவன், 50, நகை செய்யும் தொழிலாளி. இவர், பல்வேறு உருவங்களை, சிறிய அளவில் தங்கத்தில் செய்துள்ளார். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நான்கு 'இன்ச்' உயரத்தில், தங்க கிறிஸ்துமஸ் மரத்தை இவர் செய்துள்ளார்.


இதுகுறித்து தேவன் கூறியதாவது: தங்க கிறிஸ்துமஸ் மரத்தில் உள்ள இலைகள், ஒரு செ.மீ., அளவு உள்ளது. இதை செய்ய, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 5.250 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டது. 24 மணி நேரத்தில் செய்து முடிக்கப்பட்ட, கிறிஸ்துமஸ் மரத்தை, ஆம்பூரில் உள்ள சர்ச்சுக்கு இலவசமாக கொடுக்க உள்னேன். லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இதை செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை