இந்தியாவை குறிவைக்கும் சீன ' ஹேக்கர்கள்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவை குறிவைக்கும் சீன ' ஹேக்கர்கள்'

Added : டிச 08, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்தியா,India,  சீனா,  China, ஹேக்கர்கள்,Hackers, சைபர் தாக்குதல்,Cyber ​​Attack,  இந்திய சைபர் பாதுகாப்பு கம்பெனி, Indian Cyber ​​Security Company, ஜப்பான், Japan,வியட்நாம் ,Vietnam,  தென்கிழக்கு ஆசிய நாடுகள் ,Southeast Asian Countries, ரான்சம்வேர் , Ransomware,

புதுடில்லி : சீனாவின் ஏபிடி எனப்படும் ஹேக்கர்கள் குழு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் மீது சைபர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக 2018 ம் ஆண்டில் இந்தியா போன்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்திய சைபர் பாதுகாப்பு கம்பெனியான பயர்ஐ இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், சீனாவின் ஏபிடி.,க்கள் அவ்வப்போது தங்களின் இடங்களை மாற்றக் கூடியவர்கள். இவர்கள் தற்போது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை குறிவைத்துள்ளனர். 2018 ம் ஆண்டில் இந்தியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சைபர் தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் யார், எங்கிருந்து இந்த தாக்குதலை நடத்துகிறார்கள், எதற்காக நடத்துகிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிவது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. பொதுவாக தேர்தல் தேதிகளுக்கு முன்னரே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இவர்களின் அடுத்த நோக்கம் அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் ஆகும். 2018 ல் ரான்சம்வேர் பாதிப்புக்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.சீன ' ஹேக்கர்கள்' அராஜகம்

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
itz_sr - erode,இந்தியா
08-டிச-201720:22:22 IST Report Abuse
itz_sr ஹாக்கர்ஸ்கல் நம்மை நோக்கி செயல் படுவது மற்றும் அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளெல் வேலை பார்ப்பது பல காலமாக நடந்து வருகிறது , இப்பொழுதுக்கு அதிகமாகியுள்ளதுனு சொல்லுவேன் ......குப்புஸ்வாமிக்கேசவன் அவர்கள் சொல்லுவது போல் செய்தால் நாமமும் எதுலேருந்துது தப்பிக்கலாம் .....
Rate this:
Share this comment
Cancel
திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் சீனாவின் ஹாக்கர்களை இந்தியாவின் ஹாக்கர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் நானும் ஹேக்கர் என்பதில் பெருமைப்படுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
08-டிச-201710:21:42 IST Report Abuse
Kuppuswamykesavan நாம் எப்படி, தினசரி நமது வீட்டு அறையை, தினசரி நமது அலுவலக அறையை, தூய்மை செய்கிறோமோ?, அதே போல, நமது இன்டர்நெட் வசதியுள்ள, கம்யூட்டரிலும், மொபைல் போனிலும், தினசரி, அந்த கருவிகளில் உள்ள, தேவையில்லாத ஹிஸ்டரிகள், காட்ச்சி-கள், ஏபிகே பைல்கள, வீடியோக்கள் மற்றும் டவுன் லோடட் (செயலிகள் மற்றும் டாக்குமெண்ட்கள்) போன்ற விசயங்கள், இவைகளை தினசரி டிலீட் செய்து வந்தாலே, 75-சதவீதம், அன்னியர்கள், நமது சிஸ்டங்களில் ஊடுறுவலை தடுக்க முடியும் எனலாம். மேலும், தரமான, சகல அம்சங்களும் உள்ள, பிரசித்தி பெற்ற, ஆன்டி வைரஸ்சையும்(செயலி), நமது சிஸ்டங்களில், இன்டால் செய்து வந்தால், 95-சதவீதம், நமது கம்யூட்டர் மொபைல் போன் சிஸ்டங்களுக்கு, பாதுகாப்பு உறுதி கிடைக்கும் எனலாம். நாம் இன்ஸ்டால் செய்த, அந்த ஆன்டிவைரஸ் செயலியை, பீரியாடிக்கலாக, அப்டேட் செய்து வந்தோம் என்றால், நமது சிஸ்டங்களில், 99-சதவீதம், அன்னியர்களின் ஊடுருவல், தடுக்கப்படும் எனலாம். அப்போ, அந்த மீதி, 1-சதவீதம் என்ன?, என்கிறீர்களா வாசகர்களே. அது, நமது சிஸ்டங்களை, தக்க பாஸ்வார்டுகளை பயன்படுத்தி, நாம் ஓபன் செய்வது, வெளியே எங்காவது அவசரமாக, சில நிமிடங்கள் சென்று வர நேர்ந்தால், நமது சிஸ்டத்தை லாக் அவுட் செய்துவிட்டு செல்லுதல், போன்ற நமது செயல்கள்தான் எனலாம். சரிதானா வாசகர்களே?.
Rate this:
Share this comment
08-டிச-201713:26:38 IST Report Abuse
KavithaSGvery true...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X