தாயை வணங்காமல் அப்சல் குருவையா வணங்க போகிறீர்கள்? வெங்கைய்யா கேள்வி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாயை வணங்காமல் அப்சல் குருவையா வணங்க போகிறீர்கள்? வெங்கைய்யா கேள்வி

Added : டிச 08, 2017 | கருத்துகள் (110)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வெங்கைய்ய நாயுடு,Venkaiah Naidu, அப்சல் குரு,Afzal Guru, வந்தே மாதரம்,Vande Mataram, விஷ்வ இந்து பரிஷித், Vishwa Hindu Parishad, அசோக் சிங்கால்,Ashok Singhal, பாரத் மாதா கி ஜெய், Bharat Mata Ki Jai, சுப்ரீம் கோர்ட்,Supreme Court,  கலாச்சாரம் , Culture,

புதுடில்லி : விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று டில்லியில் நடந்தது.
இந்த விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, வந்தே மாதரம் என்றால் தாயை வணங்குகிறேன், தாய் நாட்டை வணங்குகிறேன் என்று அர்த்தம். அதை சொல்வதில் என்ன பிரச்னை? தாயை வணங்காமல் அப்சல் குருவையா வணங்க போகிறீர்கள்? சிலர் சொல்கிறார்கள், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற சொல்வது பாரத மாதாவை மட்டும் சொல்வதாக இல்லை, அந்த புகைப்படத்தில் பெண் தெய்வத்தின் படத்தை வைத்து வணங்க சொல்கிறீர்கள் என்று.

125 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் சாதி, நிறம், சமயம், மதம் பலரும் வேறுபட்டு இருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்தியர்களே. இந்துத்துவம் என்பது குறுகிய கருத்து அல்ல. அது பறந்து விரிந்த இந்தியாவின் கலாச்சாரத்தின் உறைவிடம். இதனை 1995 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு ஆவேசம்

பலரும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆட்சி செய்துள்ளனர். கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் இந்தியா எந்தவொரு நாடு மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. அது தான் இந்தியாவின் கலாசாரம். உலகம் ஒரு குடும்பம் என்பதையே நமது கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (110)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Selva Periannan - Mandan,யூ.எஸ்.ஏ
09-டிச-201701:58:56 IST Report Abuse
Selva Periannan நீங்கதானே இந்திய சுதந்திர தந்தை காந்தியை போட்டு தள்ளியவர்கள் இந்தியாவை ஒரு பெண்ணாக சித்தரித்து வணங்கும் நீங்கள், இந்தியாவில் பெண்களை சுதந்திரமாக வாழ விடுவதில்லை. இந்திய நாட்டை மதிக்கிறோம் என்று மார்தட்டும் ஆர் எஸ் எஸ் தீவிர மதவாதிகள், இந்திய பன்முக சட்டத்தை மதிப்பதில்லை ஒரு மாட்டை நேசித்து, மனிதனை கொள்ளும் வெறியர்கள்தானே நீங்கள்? இந்திய தாயை அவமதித்து, அசிங்க படுத்தி, கொடுமை படுத்தி, சாதி என்ற வேற்றுமையை வைத்து தீண்டத்தகாதவர்கள் என்று அநாகரிக மனம் கொண்டவர்கள்தான் நீங்கள் அனைவரும் இந்தியர்கள் என்றால், அந்த சாதியை இந்திய சரித்தரத்தில் இருந்து தூக்கி எரிந்து விட தைரியம் உண்டா உங்களுக்கு? அனைவரும் இந்தியர்கள் என்றால், அனைத்து கோவில்களிலும், சாதி பாகுபாடின்று உள்ளே நுழைய, அர்ச்சகராக முடியுமா? எதோ பதவி கிடைத்து விட்டது என்பதற்காக மேடை பேச்சில் எதோ பெரிய தியாகி, இந்தியராக பேசுவது, நடை முறை வாழ்க்கையில் எதுவும் பொருந்தவே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-201700:20:12 IST Report Abuse
Ramesh Rayen pala arasugalaga pirinthu kidantha bharatha indiayai orunkinaiththau yaar - british kaarargala thane
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
09-டிச-201700:15:41 IST Report Abuse
மஸ்தான் கனி மிஸ்டர் வெங்கையா அப்சல் குரு ஒரு மனிதர் அவரை வணங்கமுடியாது என்பதை தெரிந்து ஏன் அவரை குறிப்பிடுகிறீர் நீங்க சார்ந்த சங்கபரிவார் அமைப்பினர் நடத்தும் மிருகச்செயலை என்னவென்று சொல்லுவது? ராஜஸ்தானில் உயிரோடு ஒருவரை எரித்துக்கொண்ட கொடூரமான செயலை கண்டிக்காமல் அப்சல் குருவை பற்றி பேசுவது மக்களை ஏமாற்றும் செயல் தனிமனிதனின் வாழ்வியல் முறையில் தலையிட நீங்க யாரு? உணவளிப்பவரா? தேசபக்தி போர்வையில் மக்களை கொன்றுகுவிக்கும் செயலுக்கு துணை போகாதீர். ஆடுங்கள் ...ஒருநாள் அடங்கியே ஆகணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X