ஆர்.கே.நகருக்கு வரும் ஐம்பதாயிரம் குக்கர்கள்: தினகரன் ஏற்பாடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகருக்கு வரும் ஐம்பதாயிரம் குக்கர்கள்: தினகரன் ஏற்பாடு

Added : டிச 08, 2017 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆர்கே நகர், தினகரன், குக்கர்,

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், தொப்பி சின்னம் பெறுவதற்காக முயற்சி எடுத்தார். இல்லாதபட்சத்தில், கிரிக்கெட் மட்டை அல்லது விசில் சின்னத்தை பெறவும் விரும்பினார். ஆனால், அவரைப் போலவே சுயேட்சையாக போட்டியிடும் மற்றவர்களும் அந்த சின்னங்களை விரும்பிக் கேட்டதால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது.இப்படி அவர் கேட்ட மூன்று சின்னங்களுமே கிடைக்காததால், இறுதியில், பிரஷர் குக்கர் சின்னத்தை கேட்டுப் பெற்றார். இதையடுத்து, தாய்மார்களை கவரும் வகையில், வீட்டுக்கு வீடு, ஆர்.கே.நகர் தொகுதியில், பிரஷர் குக்கரை இலவசமாக கொடுக்கலாம் என, தினகரன் தரப்பினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக, ஐம்பதாயிரம் பிரஷர் குக்கரை ஆர்டர் செய்யச் சொல்லி, தினகரனுக்காக தீவிரமாக தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிலர், குக்கர் கம்பெனிகளை அணுகிக் கொண்டிருக்கின்றனர். இருபது கம்பெனிகள் மூலம், ஐம்பதாயிரம் பிரஷர் குக்கர்களை வாங்கி, ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் விநியோகிக்க, தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
08-டிச-201720:24:02 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> mahaa kevalamaana seyal udane inthaalin vedpumanuvai niraagarikkavendum therthal kamishan seyvaangkalaa asingkamaana kevalamaana therthale ithuthaan aabaasam ivanukkitta neraiya thuttu irukku melum kollai adikkave therthalla nikkuraan
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
08-டிச-201720:15:26 IST Report Abuse
rajan.  சபாஷ்டா தம்பி. தொப்பியை வீசின கையாலே வாயில விரலை வச்சு மன்னார்குடி மாபியா குக்கர் விசில் நல்ல அடிக்க போறடோய். இனி தமிழாடு போறா நீ கொடுக்கிற இந்த குக்கர் விசில் சத்தம் தான் போ.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
08-டிச-201719:19:45 IST Report Abuse
yaaro அட இப்படின்னா ஒரு பைக் சின்னமோ இல்ல கார் சின்னமோ கொடுத்திருக்கலாமே ..(தட் வடை போச்சே மொமெண்ட் ..)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X