பொய் தகவல் பரப்பப்படுகிறது: பொன்.ராதா குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய் தகவல் பரப்பப்படுகிறது: பொன்.ராதா குற்றச்சாட்டு

Added : டிச 08, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மீனவர்கள், பொன்.ராதா,கன்னியாகுமரி

நாகர்கோயில்: மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் எதுவுமே செய்யவில்லை என்ற பொய்யான தோற்றம் பரப்பப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரப்பர், வாழை போன்ற பயிர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் நான் சந்தித்தேன். மீனவ சகோதரர்கள் சிலர், மகாராஷ்டிரா, குஜராத் கரை ஒதுங்கியிருக்கக்கூடிய விஷயம் கேள்விப்பட்டு, அலுவலர்கள் அங்கு சென்றனர். மீனவர்களுக்கு தேவையான போர்வை, டீசல் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மத்தியில், மத்திய, மாநில அரசு எதுவும் செய்யவில்லை என பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். மீனவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. புயல் பாதித்த போது, கன்னியாகுமரியை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா பார்வையிட்டார். தேடுதல் பணியின் போது கப்பற்படையுடன் மீனவர்களையும் அனுப்பி வைத்தார். நடந்தது பேரழிவு. அதிகப்படியான உதவி செய்ய தயாராக உள்ளோம். மீனவர்களை தேடும் பணியில் கடற்படையின் 8 கப்பல்களும், 7 விமானங்களும் ஈடுபட்டுள்ளன.
பலியானவர்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
09-டிச-201706:46:11 IST Report Abuse
Tamizhan kanchi இப்போது தமிழ் நாட்டில் மக்கள் நலம் என்று போராட்டம் செய்து சில கட்சிகள் சில சமூக இயக்கங்கள் தமிழக மற்றும் மத்திய அரசுகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.. நேரிடையாக அரசை குற்றம் சொல்ல இயலாமை மற்றும் வெளிநாட்டு பணம் கொண்டு நடைபெறும் இது போன்ற செயலகளை ஆரம்ப காலத்திலே ஒடுக்கப்பட வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
08-டிச-201718:13:39 IST Report Abuse
Endless குடும்ப தலைவனை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எங்கள் ஆழந்த அந்தப்பங்கள்... மத்திய மாநில அரசுக்கள், இக்குடும்பங்களுக்கு வேண்டிய இன்உதவிகளை அளிக்கும் என நம்புவோமாக .........கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் போல இருக்கிறது இங்கு நடக்கும் போராட்டம்.... மீட்பு பணி புரிந்த என் நண்பர் ஒருவர் கூறியதாவது, கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் நடத்திய அதே கூத்தாடிகள் இந்த போராட்டத்தையும் மறைமுகமாக வழி நடத்துகின்றனர் என்று.... புயலால் பாதிக்கபட்டோரை காட்டிலும், "அவர்களுக்காக என்று" வந்த கூத்தாடி மந்தையே அதிகம்... காலம் பதில் சொல்லும் வெகு விரைவில்... வாழும் நம் பாரதம் .... வளரும் நம் பாரத பாரம்பர்யம்.....
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-டிச-201716:21:13 IST Report Abuse
Loganathan Kuttuva கவர்னர் கூட அங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து சென்றார்.
Rate this:
Share this comment
Cancel
பாரதி - Chennai ,இந்தியா
08-டிச-201715:44:19 IST Report Abuse
பாரதி மீனவர்களை மீட்க கடற்படையின் 8 கப்பல்களும், 7 விமானங்களும் ஈடுபட்டுள்ளன.சரிதான் . நல்லது . படைகளின் எண்ணிக்கையை சற்று அதிகப்படுத்தலாமே. அது அவசியமும் கூட.
Rate this:
Share this comment
Cancel
Rajesh Rajan - bangalore,இந்தியா
08-டிச-201714:51:25 IST Report Abuse
Rajesh Rajan அய்யா சென்னை ஏர்போர்ட் தாண்டி கன்னியாகுமாரி வரமாட்டாரா? சென்னை ஏர்போர்ட்டோடு தமிழ்நாடு முடிச்சுபோச்சா??
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
08-டிச-201714:08:56 IST Report Abuse
Solvathellam Unmai இந்த காவியும், அந்த பொய்யில் புலவி நிர்மலா காவியும்.. அவர்கள் தலைவன் வாயில் சுடப்பட்ட வடைகள்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
08-டிச-201714:05:21 IST Report Abuse
தேச நேசன் போராட்டம் எல்லாம்டிவி திருவிளையாடல்
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
08-டிச-201713:18:15 IST Report Abuse
Tamizhan kanchi போராட்டம் என்ற பெயரில் மீனவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வெள்ளை பாவடைகள் முன்னின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போடுவதை மீடியாக்களில் நன்றாக தெறிகிறது.. பேராபத்து வரும் நேரங்களில் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய பாதிரிகள் போராட்டம் என்ற பெயரில் அராஜகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.. இதை தமிழக அரசு உடனே காவல்துறை மூலம் ஒடுக்க வேண்டும்.. இந்த நயவஞ்சக செயலில் ஈடுபடுவோரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-201712:42:03 IST Report Abuse
Tamilan புயலிலிருந்து இவ்வளவு நாட்கள் இவரை பற்றிய தகவல் இல்லாத நிலையில், தற்போது தினமலர் கண்டுபிடித்து கொடுத்துள்ளதோ?
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-201712:17:32 IST Report Abuse
Tamilan இதை யாரால் தான் தடுக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டின் அபரிமித விஞ்சான வளர்ச்சியிலும் தடுக்க முடியாத பேரழிவுகள் நடைபெறுகின்றன. இவையனைத்தும் அரசு, அரசியல் சட்டம், அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதனால்தான் இவ்வளவு நாட்களாக இவர் காணாமல் போய்விட்டாரா?. இதை எந்த வரம்பிற்குள் கொண்டு வருவது என்பது அரசியல் சட்ட மூடர்களுக்கு இனியும் தெரியவில்லை. யாருக்கும் தெரியவில்லை. தும்பை விட்டு வாலை பிடித்து அலைந்து திரிய வேண்டிய கட்டாயம் அரசு மற்றும் அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை