அரசு துறை ஊழல்கள்: கவர்னரிடம் பா.ம.க., பட்டியல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு துறை ஊழல்கள்: கவர்னரிடம் பா.ம.க., பட்டியல்

Added : டிச 10, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:''தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் நடக்கிறது. விசாரணைக்கு உத்தரவிட்டு, தமிழகத்தை காப்பாற்றுங்கள் என, கவர்னரிடம் கெஞ்சியுள்ளோம்,'' என, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர், அன்புமணி கூறினார்.

சென்னையில் நேற்று, கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக, 206 பக்க பட்டியலை, கவர்னரிடம் கொடுத்துள்ளோம். 'வரிக்கு வரி படித்து, உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்பேன்' என, கவர்னர் உறுதி கொடுத்துள்ளார்.

இதேபோன்ற பட்டியலை, 2015 பிப்ரவரி மாதம், கவர்னர் ரோசையாவிடம் கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழகம் இவ்வளவு மோசமாக போயிருக்காது.
நாங்கள் வழங்கியுள்ள பட்டியலில், 24 ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிஉள்ளோம். இவற்றில் முக்கியமானது, மணல் கொள்ளை. இதில், 2003ல், ஜெ., ஆட்சியில் மணல் அரசுடமையாக்கப்பட்ட பின், 2017 வரை, 2,000 கோடி ரூபாய் மட்டும், அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

ஆனால், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை, ஊழல் நடக்கிறது.கடந்த, 14 ஆண்டுகளில், தமிழக அரசுக்கு, 4.5 லட்சம் கோடி ரூபாய், மணல் விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தாது மணல் விற்பனையில், 2002 முதல், 2012 வரை, 40 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.

கிரானைட் விற்பனையில், மதுரை மாவட்டத்தில் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. சுகாதாரத் துறையில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. காப்பீடு, 44 ரூபாய் என இருந்ததை, 699 ரூபாயாக உயர்த்தியதால், அரசுக்கு, 399 கோடி ரூபாய் நஷ்டம்.உயர் கல்வித் துறையில், துணை வேந்தர் நியமிக்க, 30 கோடி ரூபாய் வரை, லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கு, 30 லட்சம் ரூபாய் வாங்குகின்றனர்.

அண்ணா பல்கலையில், 600 கோடி ரூபாய் நிதி இருந்தது; இன்று, 16 கோடி ரூபாய் மட்டும் உள்ளது.மின் துறையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. 'பவர் டில்லர், வாக்கி டாக்கி' வாங்கியதில், பெரும் மோசடி நடந்துள்ளது. தார் வாங்கியதில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
அனைத்து துறைகளிலும், ஊ0ழல் நடந்துள்ளது. தயவு செய்து, தமிழகத்தை காப்பாற்றுங்கள் என, கவர்னரிடம் கெஞ்சிவிட்டு வந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanaprakasam Arumugam - Chennai,இந்தியா
10-டிச-201711:49:08 IST Report Abuse
Gnanaprakasam Arumugam தமிழகத்தில் உண்மையான எதிர்கட்சியாகவும், ஆக்கபூர்வமான அறிவுரைகளையும். தொடர்ந்து நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டும், தற்போது ஆளும் கட்சியினரின் எண்ணற்ற ஊழல்களை ஆதாரோத்தொடு ஆளுனரிடத்து அளித்து நடவடிக்கை எடுக்க சொல்லும் பா.ம.க விற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
10-டிச-201703:42:33 IST Report Abuse
Viswanathan தமிழ்நாடு இப்படியா கேவலமாக போகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X