delhi ush | அறிக்கையில் என்ன இருக்கு?| Dinamalar

அறிக்கையில் என்ன இருக்கு?

Updated : டிச 10, 2017 | Added : டிச 10, 2017 | கருத்துகள் (3)
Advertisement
டில்லி உஷ், delhi ush, நிர்மலா சீதாராமன், மீனவர், கேரளா, தமிழகம், விஜயன், காங்கிரஸ், குஜராத், பிரதமர் மோடி,  கபில் சிபல், மணிசங்கர் அய்யர்,  தேர்தல், அயோத்தி, கவர்னர், பன்வாரிலால் புரோஹித், கர்நாடகா, காங்கிரஸ், பா.ஜ., சித்தராமையா

தமிழகத்திலும், கேரளாவிலும், 'ஒக்கி' புயல் தாக்கியதும், ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமனை அழைத்த பிரதமர், 'இரு மாநிலங்களுக்கும் சென்று, புயல் நிவாரணத்தில் உதவியாக இருங்கள்' என, அனுப்பி வைத்தார். முதலில், திருவனந்தபுரம் சென்ற நிர்மலா சீதாராமன், முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசித்து, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ, அனைத்தையும் செய்தார். பின், தமிழகம் வந்தார். கன்னியாகுமரியில், புயல் நிவாரணம் தொடர்பாக ஆய்வு செய்தார்.

இதற்கிடையே, ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. 'தமிழக - கேரள மீனவர்கள், அடிக்கடி காணாமல் போகின்றனர்; தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்' என, அடிக்கடி புகார் வருவதுடன், மீனவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுகின்றனர். இது குறித்து, கடற்படையின் உளவுத் துறை விசாரணை நடத்தி உள்ளது. அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் இருக்கும் இடத்தை காட்டும், ஜி.பி.எஸ்., கருவியை எடுத்துச் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், சில காரணங்களுக்காக, அவர்கள் அதை எடுத்துச் செல்வது இல்லை; வீட்டிலேயே வைத்து விட்டுச் செல்கின்றனர்.இது குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.இதை, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சுட்டிக்காட்டியதும், அவர் அதிர்ந்து போனார். அதன்பின்,
மீனவர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை, அவர் குறைத்தார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரசின் உள்குத்து!

குஜராத் சட்டசபை தேர்தலில், அதிரடியாக பிரசாரம் செய்து வருகிறார், ராகுல். 'மோடிக்கு, கடுமையான போட்டியை ஏற்படுத்தி உள்ளது காங்கிரஸ்' என, பேசப்படும் நிலையில், காங்கிரசின் இரு தலைவர்கள், வாயை வைத்து சும்மா இருக்காமல், உளறிக் கொட்டி, காங்கிரசின் வெற்றி வாய்ப்பை கெடுக்கின்றனர்.முன்னாள் அமைச்சர், கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி வழக்கில், முஸ்லிம் மனுதாரர்களுக்கு ஆஜரானார். 'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த வழக்கைவிசாரிக்க வேண்டும்; இப்போது கூடாது' என, வாதிட்டு, சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இதை, சரியாக பயன்படுத்திய மோடி, தன் பிரசாரத்தில், காங்கிரசை கடுமையாக சாடி வருகிறார். 'ஏன், சிபல் இப்படி வாதிட்டார்?' என, காங்கிரசார் நொந்து போயுள்ளனர்.'குஜராத் தேர்தல் நடக்கும் சமயத்தில், அயோத்தி வழக்கு விசாரணை சரி வராது; இதை வைத்து, பா.ஜ.,வினர் தேர்த லில் பிரசாரம் செய்வர். எனவே, குஜராத் தேர்தல் முடிவு வெளியான பின், 2018 ஜன., அல்லது பிப்ரவரியில் விசாரணையை வைத்துக் கொள்ளலாம்' என, வாதிடும்படி, காங்., தலைவர்கள், சிபலுக்கு ஆலோசனை கூறினராம்.

ஆனால், கபில் சிபல், 2018ம் ஆண்டை மறந்து, '2019 ஜூலைக்கு பின், விசாரணை வேண்டும்' என, உளறிவிட்டார் என்கின்றனர், காங்கிரசார்.இதாவது பரவாயில்லை; நம்ம ஊர் மணிசங்கர் அய்யர், 'மோடி நீசமானவர், கேவலமானவர்' என, ஹிந்தியில் விமர்சிக்க, மோடியை கேட்க வேண்டுமா; இந்த ஒரு வாசகத்தை வைத்து, பிரசாரத்தை பரபரப்பாக்கி விட்டார். 'இந்த இரண்டு பேரின் உளறல் காரணமாக, குஜராத் தேர்தலில், வெற்றி பறிபோய் விடுமோ' என, காங்., மூத்த தலைவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

எங்களுக்கு சம்பந்தமில்லை!

தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பதவியேற்ற நாளிலிருந்து, அதிரடியாக செயல்படுகிறார். அடிக்கடி,தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் செல்கிறார்; அங்கு அதிகாரிகளை வரச் சொல்லி, 'மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன' என, ஆய்வு செய்கிறார்.மக்களையும் சந்தித்து குறைகளை கேட்கிறார். 'முதல்வரே இங்கு வராத போது, கவர்னர் வருகிறாரே' என, மக்கள்மகிழ்ச்சியோடு, தங்கள் பிரச்னைகளை கவர்னருக்கு தெரிவிக்கின்றனர்.

இதை, 'பா.ஜ., கவர்னர் மூலமாக ஆட்சி நடத்தப் பார்க்கிறது' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. இப்போது உள்ள பிரச்னையில், மத்திய அரசிடம் எதற்கு மோதல் என, ஆளுங்கட்சி வாய் திறக்க முடியாமல், அமைதியாக உள்ளது.தமிழக கவர்னரின் நடவடிக்கைகள், மத்திய அரசை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன.

இது குறித்து, மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில்,- 'கவர்னர் இப்படி செய்ய வேண்டும்; அப்படி செய்ய வேண்டும் என, நாங்கள் யாரும் இங்கிருந்து சொல்வதில்லை. பா.ஜ.,விற்கும், கவர்னர் செயல்பாட்டிற்கும், எந்த தொடர்பும் இல்லை; அவர் என்ன செய்ய வேண்டும் என, விரும்புகிறாரோ, அதை செய்து வருகிறார். அதற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும்?' என்கிறார்.

கர்நாடகாவில் குடும்ப பிரச்னை!

அடுத்த ஆண்டு, கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எப்படியும், இங்கு ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்துடன், பா.ஜ., செயல்படுகிறது. ஆனால், வழக்கம் போல, தங்கள் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்னை, பா.ஜ., வெற்றியை சுலபமாக்கி விடுமோ என, காங்கிரசார் அஞ்சுகின்றனர்.

முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில, காங்., தலைவர், பரமேஸ்வருக்கும் சண்டை, ஜோராக நடக்கிறது; ஒருவரை ஒருவர் மாட்டி விட முயற்சிக்கின்றனர். சட்டசபை தேர்தலில், சித்தராமையா, தன் இரண்டாவது மகன், யதிந்தராவை, வேட்பாளராக்க ஆசைப்படுகிறார். இதைத் தடுக்க, பரமேஸ்வர் ஒரு திட்டம் அறிவித்தார். 'ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்' என்ற திட்டம் அது. இதன்படி, சித்தராமையா அல்லது அவரது மகன் என, இருவரில் யாராவது ஒருவர் தான் போட்டியிட முடியும்.

இதனால் கடுப்பான முதல்வர், டில்லியில், காங்., மேலிடத்தில் புகார் அளித்துள்ளார். 'கர்நாடக, காங்., - எம்.பி., மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபாவில், காங்., தலைவராக உள்ளார். அவரது மகன், கர்நாடக அமைச்சராக இருக்கிறார். பரமேஸ்வரின், ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட் என்றால், கார்கே கதை என்னவாகும்.

சோனியாவும், எம்.பி., ராகுலும், எம்.பி., இப்போது ராகுல், கட்சி தலைவராகி விட்டார். இப்படி, அந்த குடும்பத்தில் இருக்கும் போது, என் குடும்பத்தை ஏன் தடுக்கிறீர்கள்?' என, சித்தராமையா கேட்க, காங்., தலைவர்கள் ஆடிப் போய் விட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvamony - manama,பஹ்ரைன்
04-ஜன-201811:46:21 IST Report Abuse
Selvamony இந்த அமைச்சர் பதவி ஏற்கும் போது எந்த மொழியில் பேசி பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பாருங்கள் . அந்த அளவு கன்னட பாசம் . இவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
S V Krishnan - Chennai,இந்தியா
12-டிச-201711:37:34 IST Report Abuse
S V Krishnan நிர்மலா சீதாராமன் மிகவும் பக்குவமாக நிலைமைகளை ஆராய்ந்து அவற்றிற்கு எல்லோருக்கும் சாதகமான நடவடிக்கை மேற்கொள்கிறார். அவர் ஒன்றும் பழுத்த அரசியல்வாதி என்று கூறமுடியாது மந்திரியாகவும் முன்பு இருந்ததில்லை. எந்த இலாக்கா பொறுப்பு எடுத்தாலும் அதன் கொள்கைகளை நன்றாக தெரிந்துகொண்டு செயல் படுகிறார். இதற்க்கு கரணம் அவர் தன்னலம் பார்க்காத தலைவர். மோடி அத்வானி வாஜ்பாய் வேங்கைச் நாயுடு போன்று தலைவர்களை தனது முன்னோடியாக கருத்தில் கொண்டு செயல் படுகிறார். அவர் நீடுழி வாழவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-டிச-201715:04:06 IST Report Abuse
Swaminathan Nathஉண்மை, நிர்மலா, நிதானமாக செயல் படுகிறார், உடன் பாதிக்க பட மக்களை வந்து பார்த்தார், இதற்கு முன் யாரும் இப்படி செய்தது இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் மோடி டீமுக்கு வாழ்த்துக்கள்,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை