தலிபான் தலைவருடன் சிதம்பரம்; வெடித்தது புது சர்ச்சை Dinamalar
பதிவு செய்த நாள் :
தலிபான் தலைவருடன் சிதம்பரம்
வெடித்தது புது சர்ச்சை

புதுடில்லி : காங்., மூத்த தலைவர், சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்த போது, பயங்கரவாத அமைப்பான, தலிபானின் தலைவன் பங்கேற்ற கூட்டத்தில், பங்கேற்றது தொடர்பான படம் வெளியாகி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தலிபான் தலைவருடன் சிதம்பரம்; வெடித்தது புது சர்ச்சை


குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'பாகிஸ்தானுடன், காங்., மூத்த தலைவர்கள் ரகசிய பேச்சு நடத்தினர்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இந்நிலையில், காங்., மூத்த தலைவர், சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஒரு நிகழ்ச்சியில், தலிபான் பயங்கரவாத அமைப்பின்தலைவன், முல்லா - அப்துல்ஜயீப் உடன் இருப்பது போன்ற படம், தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த, 2013ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அந்த படத்தை, தற்போது, ராணுவ அமைச்சராக உள்ள, பா.ஜ., மூத்த தலைவர், நிர்மலா சீதாராமன், 2013ல் வெளியிட்டார். அந்த படத்தை மீண்டும் வெளியிட்டு, அது குறித்து, பா.ஜ., விளக்கம்கேட்டுள்ளது.

இது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், நளின் கோஹ்லி கூறியதாவது: கடந்த, 2013ல், ஒரு நிகழ்ச்சியில் சிதம்பரம் பங்கேற்றார்.

Advertisement

அப்போது, அவருக்கு அருகில், தலிபான் பயங்கரவாத தலைவன், ஜயீப்பும் அமர்ந்து உள்ளான்.

ஒரு பயங்கரவாத தலைவன் அங்கிருப்பதை அறிந்தவுடன், சிதம்பரம் அங்கிருந்து வெளியிருக்க வேண்டாமா? அவர், நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக, விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-டிச-201700:14:41 IST Report Abuse

Rajendra Bupathiஅது ஒரு பெரிய மேட்டரா?இங்க அரசியல் வாதிங்கள நோண்டி நொங்கெடுத்தாலே ஏகபட்டது கிடைக்குமே?ஏன் வீணா செத்த பாம்ப அடிச்சிகிட்டு?

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
12-டிச-201723:51:26 IST Report Abuse

Mohan Nadarஇப்படி ஒரு பலவீனமான பிரதமர் இருந்தால் பாக்கிஸ்தான் மட்டுமல்ல சீனாவும் வரும்

Rate this:
kadhiravan - thiruvaroor,இந்தியா
12-டிச-201720:09:29 IST Report Abuse

kadhiravanபிஜேபி ஒரு போட்டோஷாப் கட்சி என்பதை மேலும் மேலும் நிரூபிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுத்து இருக்கலாமே. இப்பொழுது தேர்தலுக்கு தேவைப்படுகிறதா? தேர்தல் முடிந்தவுடன் இந்த பிரச்னை முடிந்துவிடும்.., என்ன நிகழ்ச்சி, எப்போது, எங்கே ? மற்ற விவரங்கள் என்ன? ஏதும் கூறாமல் தீவிரவாத தொடர்பு என்றால்? அப்படி தீவிரவாத தொடர்பிருந்தால் அதை இப்படியா போட்டோ எடுக்கும் அளவுக்கு இருக்கும், பக்தால்ஸ் ?? கொலை செய்யுறவன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு முன்னாடியா செய்வான்?? அப்படி இருக்கு உங்கள் கதை. ஏன் இப்படி unrest mode இல் இருக்கிறார்கள் பிஜேபி வாலாக்கள், ஒருவேளை குஜராத்தில் கோவிந்தாவா?? இது போட்டோஷாப் தகிடுதத்தம் என்று படத்தைப் பார்த்தாலே அப்பட்டமாகத் தெரிகிறது. பிஜேபி இவ்வளவு பயந்து நடுங்கிப் பார்த்ததே இல்லை. அதுக்காக இவ்வளவு கீழ்த்தரமாகப் போகும் என்றும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை..,

Rate this:
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
12-டிச-201718:53:25 IST Report Abuse

மஸ்தான் கனி2013ல், ஒரு நிகழ்ச்சியில் சிதம்பரம் பங்கேற்றார்..., ஏதோ போனவரத்தில் ப.சி பங்கெடுத்ததுப் போல் சொல்லுறாங்க., ஓட்டுவாங்கணும் என்றால் எந்த வேலையும் செய்வார்கள் வளர்ச்சிபற்றி பேசுவார்கள் என்றால் பசி பற்றி பேசுகிறார்கள்.,

Rate this:
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201718:44:48 IST Report Abuse

SundarThere may be a good faith and intention and there is probable reason that Mr.Chidambaram may have for a dialogue with him to stop terrorism in India besides BJP's effort, behind the scene. Why BJP can think in this direction? Throw the mud for political gain to attract the voter is not a gentleman attitude.

Rate this:
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
12-டிச-201718:23:48 IST Report Abuse

K. V. Ramani Rockfortகாங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்றால், எகத்தாளமாக பேசுகிறார்களே, இப்போது ?

Rate this:
Muthu - Langenfeld,ஜெர்மனி
12-டிச-201717:51:03 IST Report Abuse

Muthuஉலக பயங்ரவாதத்தை ஒழிக்க அழைப்புவிடும் அமேரிக்கா ~ரஷ்யா வே பயங்ரவாத அமைப்புக்களை உருவாக்குவதிலும் உதவுவதையம் விட இது ஒன்றும் பெரியதல்ல, தலிபானின் தலைவன் பங்கேற்ற யார் அழைப்புவிடுத்தது? அரசியலில் அன்றைய நன்பன் இன்றைய எதிரியாக இருக்கலாம்.

Rate this:
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201717:28:48 IST Report Abuse

SundarThis type of scathing news is unwarranted since coincidental presence of Mr. Chidambaram how it damages India? BJP frequently meets the Pakistan for peace and how this will be interpreted. .

Rate this:
bal - chennai,இந்தியா
12-டிச-201717:16:16 IST Report Abuse

balஇருவர்க்கும் ஒருவற்கு ஒருவர் யார் என்றே தெரியாமல் விமான நிலையத்தில் உட்கார்ந்திருப்பது போல் உள்ளது போட்டோ. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...அம்மம்மா யாவரும் இங்கு கொடுமைக்காரர்கள்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
12-டிச-201716:58:54 IST Report Abuse

ganapati sbகள்ளப்பணம் ஒரே சீரியலில் இரண்டு பணம் அடிப்பதற்கு வசதியாக ஏற்கனவே இந்திய கரண்சி அடிக்கும் இயந்திரத்தை பழுதாகிவிட்டது என கூறி பாகிஸ்தானுக்கு விற்றதாக சிதம்பரம் மேல் புகார் உள்ளது இப்போது தீவிரவாத தொடர்பு வேறா இத்தாலி கான் க்ராஸ் கட்சி பதவி அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை விற்று சம்பாதித்துள்ளது

Rate this:
மேலும் 105 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement