காவேரிக்கரை ஒரத்திலே...| Dinamalar

காவேரிக்கரை ஒரத்திலே...

Updated : டிச 12, 2017 | Added : டிச 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தஞ்சாவூருக்கு பணி நிமித்தமாக ஒரு பயணம்

அப்படியே அருமை நண்பர்கள் புலிவலம் ரவி மற்றும் டாக்டர் செந்தில்குமாருடன் காவிரிக்கரை ஒரமாக ஒரு போட்டோ வாக் அனுபவம்.
எத்தனை வருடங்கள் இந்த துறையில் இருக்கிறோம் என்பது பெரிதல்ல எந்த அளவிற்கு இந்த துறையில் நம்மை புதுப்பித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதே முக்கியம்,நண்பர்கள் உபயத்தில் நிறைய என்னை புதுப்பித்துக் கொண்டேன்.

உண்மையில் நிக்கான் நிறுவனம் தத்தெடுத்து கொண்டாடிய வேண்டிய புகைப்படக் கலைஞர் புலிவலம் ரவி.நிக்கான் கேமிராவில் நமக்கு தெரியாதது எதுவுமே இருக்கக்கூடாது என்பதற்காக இரவுகளை பகலாக்கி தொழில் நுட்பத்தை படித்து தெரிந்து தெளிவு பெற்றவர்.அந்த தொழில் நுட்பங்களை தனக்குள் வைத்துக் கொள்ளாமல் ஊர் ஊராக போய் சொல்லித்தந்து வருபவர்.
அவரது எழுபதாவது நிக்கான் மெனு செட்டிங் வகுப்பை பார்க்கும் அனுபவம் கிடைத்தது,ஏதாவது தொழில் செஞ்சு பிழைச்சுக்க விரும்பும் தம்பிக்கு எப்படி ஒரு அண்ணன் வாஞ்சையுடன் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பாரோ அப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அதே போல மருத்துவத்தில் சாதனை பல படைத்த டாக்டர் செந்தில்குமார் புகைப்படத்தில் சாதனை படைக்கும் விதத்தில் படங்களை எடுத்து அசத்திவருகிறார்.
இருவருடனும் தஞ்சையில் ஆரம்பித்த போட்டோ வாக் திருவையாறு வரை நீண்டது.சமீபத்திய மழை எல்லா இடங்களையும் பசுமையாக்கி வைத்திருக்கிறது.பல இடங்களிலம் அருவி போல விழும் தண்ணீரை பார்க்கவே ஆசையாக இருக்கிறது.


எத்தனையோ முறை தஞ்சாவூரை பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த முறை பார்த்தது போல பார்த்தது இல்லை நன்றி டாக்டருக்கே.மதுரை மீனாட்சி கோபுரத்தை விட,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோபுரத்தைவிட பெரிய கோவில் கோபுரம் சிறிது ஆனால் பெரிய கோயில் என்கிறார்கள் ஏன் தெரியுமா?என்றெல்லாம் கேட்டு அதற்கு சுவராசியமான பதில்களும் கொடுத்தனர்.

முதல் நாள் இரவு எழுந்திரித்து போய் கைகழுவக்கூட போகாமல் 'பிங்கர் பவுலில்' கைகழுவிய அனுபவமும் உண்டு, மறுநாள் காலையில் குடிசைக்கடையில் விரலில் ஒட்டிக்கொண்ட சுண்டல் மசாலாவினை சப்புக்கொட்டி சாப்பிட்ட அனுபவமும் உண்டு.

திருவையாறில் அனைத்து விஐபிக்களும் பார்க்கும் இடத்தில் ஒரு வீட்டின் மாடியில் செடியல்ல மரமே வளர்ந்திருக்கிறது.தரையில் வளர்ந்தால் வெட்டி வீழ்த்திவிடுவார்கள் என்பதால் வீட்டின் மாடியில் வளர்கிறதோ என்னவோ?
காரைக்கால் அதிகம் மக்கள் நெரிசல் இல்லாத அற்புதமான இடம்.கடற்கரையில் சூரிய உதயம் அஸ்தமனம் இரண்டும் பார்க்க அழகாக இருக்கிறது ஆனால் பார்த்து ரசிக்கத்தான் ஆட்களைக் காணோம்.

சமீபத்திய புயல் கடலில் இருந்து அடித்துக்கொண்டு வந்திருந்த மரம் மற்றும் ஒரு எந்திரப்படகு எல்லாம் கரையில் புயலின் அடையாளமாக காணப்படுகிறது.
இங்குள்ள காரைக்காலம்மையார் தெப்பக்குளத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறையினர் அவசியம் பார்க்கவேண்டும் அப்படி ஒரு அழகில் பராமரிக்கிறார்கள்.காரைக்காலை மையமாக வைத்து புகைப்பட ஆர்வலர்கள் நிறைய போட்டோ வாக் போடலாம் நிறைய புதிய விஷயங்கள் கிடைக்கும்.

--எல்.முருகராஜ்
-murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X